சைவர்கள் அனுட்டிக்கும் விரதங்களுள் கேதார கெளரி விரதம் மிக முக்கியமானதாகும். இவ்வருடம் கேதார கெளரி விரதம் புரட்டாதி திங்கள் 13 ஆம் நாள் வெள்ளிக்கிழமை (2017-09-29) முதல் ஆரம்பித்து ஐப்பசி 2 ஆம் நாள் புதன்கிழமை (2017-10-18) தீபாவளி அன்று பூர்த்தியாகவுள்ளது.
இவ்விரத காலத்தில் ஒட்டவா சிவன் கோயிலில் எம்பெருமானுக்கு விஷேச அபிஷேக பூசை நடைபெறவுள்ளது. விரத பூர்த்தி நாள் 2017-10-18 அன்று எம்பெருமானுக்கு விஷேச கோமாபிஷேக பூசையும் அதனைத்தொடர்ந்து எம்பெருமான் எம்பெருமாட்டி சமேதராய் வீதியுலாவந்து அடியார்க்களுக்கு அருள் வழங்கும் சிறப்பு நிகழ்ச்சியும், அதனைத் தொடர்ந்து விரதம் பூண்ட அடியார்களுக்கு பெட்டிக் காப்பு பிரசாதம் வழங்கலும் வெகுசிறப்பாக நடைபெற எம்பெருமான் அருள் கூடியுள்ளது.

ஓம் நமசிவாய

Kethara Gowri Viratham is an important fasting observed by Saiva Devotees yearly. According to Saiva Calandar, this year the Viratham begins on 29 September 2017 Friday and ends on 18 October 2017 Wednesday.
On these important Fasting days Special Abisheka Pooja will be conducted to Lord Sivan & Paarvathy. On the last day of Fasting (2017-10-18), Lord Sivan & Paarvathy will come on procession following Special Komabisheka Pooja. On completion of Vasantha Mandapa Pooja, Kaappu tying ceremony will be conducted to devotees followed by distribution of Petty Kaappu Prasatham.