Masi Magam
Friday February 23, 2024

Masi Magam, also known as Maasi Makam, is a Tamil Hindu festival which is celebrated by Tamil speaking people. It is celebrated in Tamil month Masi during Makam Nakshatra

மாசிமகம்
வெள்ளிக்கிழமை  23-02-2024

மாலை6.30 மணிஉபயகாரர் சங்கல்பம், நவகலச ஹோம பூசை
சிவன் / அம்மன் கலச அபிஷேகம்
மாலை7.00 மணிகூட்டுப் பிராத்தனை
மாலை7.45 மணிவிசேட மாலைப்பூசை , நைவேத்தியம்
ஶ்ரீதையல்நாயகிசமேத வைத்தியநாதசுவாமி உள்வீதி வலம் வந்து அடியார்களுக்கு அருளல்
விபூதி பிரசாதம்  வழங்கல்

மாசிமகம் என்பது மாசி மாத பெளர்ணமியுடன் கூடிவரும் மக நட்சத்திர நாளில் இந்துக்களால் கொண்டாடப்படும் ஒரு சிறப்பான நாளாகும்.

அன்றைய தினம் கடலாடும் விழா என்று கொண்டாடப்படுகிறது.
பிறவிப் பெருங்கடலில் வீழ்ந்து துன்பக்கடலில் மாய்ந்தழுந்தும் ஆன்மாவானது இறைவனது அருட்கடலாகிய இன்பவெள்ளத்தில் அமிழ்ந்து திளைக்கச் செய்யும் நன்நாளே மாசிமகக் கடலாடு தீர்த்தமாகும்.

தீர்த்தமாட இயலாதவர்கள் விரதமிருந்து கோயிலுக்குச் சென்று இந்நாளைக் கொண்டாடுவர்.