ஸ்ரீ ருத்ர ஹோமம் SRI RUDRA HOMAM

 Sunday 2018-01-21

ஒட்டாவா மாநகரில் எழுந்தருளி வேண்டும் வரம் தந்து அடியார்களுக்கு அருள் பாலிக்கும் ஸ்ரீ தையல்நாயகி சமேத வைத்தியநாத சுவாமியின் அனுக்கிரகத்தினால் நமது ஆலயத்தில் வருடத்துக்கு 7 முறை வளர்பிறையில் அடியார்களது சுபிக்‌ஷம் மேலோங்கவும் ஆலயத்தின் இறை சாந்நித்தியம் பெருகவும் சிவபெருமானுக்கு மிகவும் உகந்ததான ”ஸ்ரீ ருத்ர ஹோமம்”  நடைபெற திருவருள் கூடியுள்ளது.

அதன் பிரகாரம் நிகழும் மங்களகரமான ஏவிளம்பி வருடம் தை மாதம் 8ம் நாள் (ஜனவரி 21, 2018) ஞாயிற்றுக்கிழமை பூரட்டாதி நட்சத்திரம் கூடிய சுபயோக சுப தினத்தில் காலை 10.30 மணியளவில் முதலாவது ஸ்ரீ ருத்ர ஹோமமானது வைத்தியநாத சுவாமிக்கு  நடைபெறும்.

 

இந்த மகத்துவம் பொருந்திய 6வது ஹோமத்தில் பங்கேற்க விரும்பும் அடியார்கள் கோயில் பணிமனையுடன் தொடர்புகொண்டு $21 செலுத்தி தங்கள் பெயர் நட்சத்திரத்தைப் பதிவு செய்யும்படி வேண்டுகின்றோம்.

ஓம் நமசிவாய!

By the grace of Lord Sri Taiyalnayaki Sametha Vaithiyanatha Swami, who is blessing devotees from Vaitheeswarm at North Gower, “Rudra Homam” is to be conducted monthly during auspicious time for the benefit of devotees and to increase the “Irai Saanniththiyam” of the Temple.

Accordingly, during this Eavilambi year,  Thai month – 8th day, (January 21, 2018) Sunday, during the auspicious time defined by Poorattaathy Natchathram from 10.30 AM, the powerful 1st  “Sri Rudra Homam” will be conducted for Sri Vaithiyanatha Swami.

 

Temple Administration kindly requests interested devotees to contact Temple Office to pay $21, register their names and natchathirams and to participate in this great ‘Sri Rudra Homam’ to Lord Siva and get benefitted.