2024 

Kurthi  Chithrai New year
Saturday April 13 

சித்திரை (குரோதி) வருடப் பிறப்பு  
சனிக்கிழமை : 13 – 4

 

சித்திரை மாதம் 1ம் திகதி, (13/04/2024 சனிக்கிழமை நடைபெற  இறையருள் கூடியுள்ளது.

காலை 9.00 மணி காலைப் பூசை
காலை11.00 மணி நவகலச விசேட அபிசேகம் ஆரம்பம்
மதியம்12.00 மணிவிசேட மதியப் பூசை
மாலை8.00 மணி மாலைப் பூசை , விபூதி பிரசாதம்  வழங்கல்

சிவனடியார்கள் இன் நன்நாளில் ஆலயத்துக்கு வருகை தந்து அபிஷேக பூசை ஆராதனைகளில் கலுந்து கொண்டு எம் பெருமான் பெருமாட்டி பேரருளை பெற்றுய்யுமாறு வேண்டுகிறோம்.

அன்று ஓட்டாவா சிவன் கோயில் காலை 8:00 மணி முதல் மாலை 9:00 மணி வரை அடியார்களின் இறை வழிபாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

மருத்து நீர் பெற விரும்புவோர் வியாழக்கிழமை (11 – 04 – 2024) மாலை 8.00 மணி முதல் கோயிலில் பெற்றுக்கொள்ளலாம்.

காலை 9:00 மணி, மதியம் 12.00 மணி, மாலை 8.00 மணி மூன்று நேரமும் சகல தெய்வங்களுக்கும் அபிஷேகமும் விஷேச பூசையும் நடைபெறும்.

ஓட்டாவில் குரோதி வருடம் 13 – 04 – 20243 சனிக்கிழமை முற்பகல் 10.46 மணிக்குப் பிறக்கின்றது.

இப் புண்ணிய காலத்தில் யாவரும் மருடத்துநீர் வைத்து குளியல் செய்து நீல நிறமுடைய பட்டாடை அல்லது நீலக்கரை அணிந்த பட்டாடையாவது அணிவது உகந்தததாகும்.

ஒட்டாவில்வில் சனிக்கிழமை காலை 6.43 முதல் மாலை 7.54 வரை விஷு புண்ணிய காலமமாகும்.

சங்கிரமதோசஷ நட்சத்திரங்கள்:
கார்த்திகை 3, 4 ம் பாதம், ரோகிணி, மிருகசீரிடம், சித்திரை, சுவாதி, விசாகம், அவிட்டம் ஆகிய நட்சந்திரங்களில் பிறந்தவவர்களுக்குச் சங்கிரமதோசஷம் இருப்பதால் மருத்து நீர் தேய்த்து குளியல் செய்து, தான தர்ம வழிபாடு செய்வது சிறந்தது .

Tamil New Year.
First day of the Kurothi Tamil New Year (Chithirai 1st) is on Saturday April 13, 2024 Ottawa Sivan Temple will be kept opened from 8.00AM to 9.00PM on that day for devotees to worship.
Special Abishekam & Poojas will be conducted to all deities  at 9.00AM, 12.00 Noon and 8.00PM to bless Happy and Prosperous life to all devotees during the New Year.

Chithrai New Year Day  early morning time, devotees in general apply ‘Maruththu Neer’, take bath, dress with new clothes, visit temple and worship, offer
Pongal to Sun God, get blessings from Guru, Parents and Elders, send greetings to relations and friends, share and have food items with six different tastes (Aru Suvai Undi),
A happy and prosperous life by enjoying this rare human birth.

சூரியன் மேட இராசிக்குள் நுழைவது சித்திரை மாதப் பிறப்பு எனப்படும்.
தமிழர்களது காலக்கணிப்பு முறையின்படி ஒரு ஆண்டுக்குரிய பன்னிரெண்டு மாதங்களில் சித்திரை முதலாவது மாதமாக கருதப்படுகிறது.
சித்திரை மாதம் 31 நாட்களைக் கொண்டது. ஆங்கில நாட்காட்டியில் ஏப்ரல் மாதம் 14 ஆம் நாள் முதல் மே மாதம் 14 ஆம் நாள் வரை தமிழ் சித்திரை மாதமாகும்.

புதிய எதிர்பார்ப்புகளையும் நம்பிக்கைகளையும் வைத்து மங்களகரமான திருநாளாக சித்திரைப் புதுவருடம் வரவேற்கப்படுகிறது.

இவ்வருடம்  பூசைகளில் கலந்துகொண்டு எம்பெருமான் ஸ்ரீ வைத்தியநாத சுவாமியினதும் எம்பெருமாட்டி ஸ்ரீ தையல்நாயகியினதும் பேரருள் பெற்று பெருவாழ்வு வாழ்வீராக.

பக்தர்கள் சித்திரை புத்தாண்டு பிறந்த திங்கட்கிழமை அதிகாலையில் மருத்து நீர் தேய்த்து ஸ்நானம் செய்து புத்தாடை தரித்து ஆபரணமணிந்து கோயிலுக்குச் சென்று தெய்வ வழிபாடு செய்து சூரியனுக்குப் பொங்கல் பூசைகள் செய்து குரு பெற்றோர் முதலிய பெரியோரை வணங்கி ஆசி பெற்று பந்து மித்திரர்களுடன் அளவளாவி அறுசுவை உண்டிகள் அருந்தி அரிய தவத்தால் பெற்ற மானிடப் பிறவியில் செயற்பாலனவற்றைச் சிந்தித்து மங்களகரமாக வாழக்கடவர்.