மெய்யடியார்களே,

ஒட்டாவா சிவன் ஆலயத்தில் திருவெம்பாவை இவ்வருடம் மார்கழி மாதம் 08 ம் திகதி, (23/12/2017) சனிக்கிழமை தொடங்கி நடைபெற்று மார்கழி 17 ம் திகதி (01/01/2018), திங்கள்கிழமை திருவாதிரையுடன் முடிவு பெற இறையருள் கூடியுள்ளது. அன்றைய தினம் அதிகாலை நடேசர் அபிஷேகமும் நடைபெறும்

இத்தினங்களில் ஆலயத்திற்கு வருகை தந்து திருவெம்பாவைப் பூசைகளிலும் 10ம் நாள் திருவாதிரை பூசையிலும் பங்குபெற்று எம்பெருமான், எம்பெருமாட்டியின் அருளை பெறுமாறு அன்புடன் வேண்டுகிறோம்.

“Thiruvempavai Poosai” will be conducted this year from 23 Dec. 2017, Saturday and will end
with “Thiruvathirai” on 01 January 2018, Monday.

Kindly note the details of morning times of Poosai given above. You are welcome to attend the temple on these days to get blessed by God Sivan in the form of Lord Natarajar & Sivakami Ambal.

23-12-2017 – 31-12-2017 : திருவெம்பாவை
காலை
5.30 AM : திருப்பள்ளியெழுச்சி பாடல்கள் (Thirupalli Eluchi Singing)
6.00 AM : திருவெம்பாவை பாடல்களுடன் விசேட பூஜை (Special Poosai along with
Singing of Thiruvempavai)
7.00 AM : பிரசாதம் வழங்கல் (Distribution of Pirasatham)

01-01-2018 : திருவாதிரை – Thiruvadhirai
காலை
4.30 AM :திருப்பள்ளியெழுச்சி பாடல்கள் (Thirupalli Eluchi Singing)
5.00 AM : சிவனுக்கும் அம்பாளுக்கும் அபிஷேகம்
தொடர்ந்து உபயகாரர் சங்கல்பம், நவகலச பூசை, ஹோமம்
(Continuing with Sponsors Sangkalpam, Nava Kalasa Poosai & Homam)
நடராஜர் சிவகாமிக்கு விசேட அபிஷேக‌மும் தொடர்ந்து ஆருத்ரா தரிசனம்
(Special Abishekam to Natarajar & Sivakami followed by Arudra Dharisanam)
7.00 AM : திருவெம்பாவை பாடல்களுடன் விசேட பூஜை (Special Poosai along with
Singing of Thiruvempavai)
8.00 AM : எம்பெருமான் நடராஜர் சிவகாமி அம்மை சமேதராய் உள் வீதி வலம் வந்து
அருட் காட்சி தந்தருளுவார் (Lord Natarajar along with Sivakami’s procession of inner
court to bless devotees)
8.30 AM : பிரசாதம் வழங்கல் (Distribution of Pirasatham)

இவ்வரிய நன்நாட்களில் ஆலய தரிசனம் செய்து இறையருள் பெறுவீர். இவ்விசேட நாட்களில் எம்பெருமானுக்கு பால் அபிஷேகம் செய்ய விரும்பும் அடியார்கள் ஆலய பணிமனையைத் தொடர்பு கொள்ளவும்.