Friday 08 December 2017
Date:03/12/2017 - 23/12/2017 
Repeat Every Day
Pillaiyar kathai / பிள்ளையார் கதை

இது கார்த்திகை மாத தேய்பிறைப் பிரதமை முதல் மார்கழி மாத வளர்பிறைச் சட்டித் திதி வரையுள்ள இருபத்தொரு நாட்கள் அனுட்டிக்கப்படும் விரதமாகும்.
இதை பெருங்கதை விரதம், பிள்ளையார் கதை விரதம் எனவும் அழைப்பர்.
முதல் இருபது நாட்களிலும் ஒருபோது உண்டு, பிள்ளையார் கதையைப் பெரியோர்கள் சொல்லக் கேட்டுக் கொண்டு எப்போதும் தியானத்தில் இருப்பவர்களாக நாட்களைக் கழித்தல் வேண்டும்.
இறுதிநாள் மட்டும் உணவை விடுத்து மறுநாட்களையில் பாரணை செய்துவிரதத்தை முடித்துக் கொள்ளுதல் மரபு. ஈழத்தில் உள்ள விநாயகர் ஆலயங்களில் இவ்விரதகாலங்களில் வரதபண்டிதரின் பிள்ளையார் கதை, விநாயக புராணம் என்பவற்றைப் பராயணம் செய்யும்வழக்கம் நெடுங்காலமாகப் பேணப்பட்டு வருகின்றது.

விநாயகனே வெவ்வினையை வேர்அறுக்க வல்லான்
விநாயகனே வேட்கை தணிவிப்பான்-விநாயகனே
விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம் தன்மையினால்
கண்ணில் பணிமின் கனிந்து.

ஒட்டாவா சிவன் ஆலயத்தில் விநாயகர் விரதமானது சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது. விநாயகர் விரதம் 03-12-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று ஆரம்பமாகி 23-12-2017 சனிக்கிழமை விநாயகர் சஷ்டியுடன் நிறைவடைகின்றது.
Vinayakar Viratham, the most important Viratham to get Lord Ganesha’s blessings is observed by devotees of Ottawa Sivan Temple from sunday 03 Dec. 2017. The ‘Viratham’ ends with Vinayakar Sashti on Saturday 23 Dec. 2017.

Back to event list