Wednesday 20 June 2018 Date:12/07/2024 - 12/07/2024 05:00-13:00 ஆனி உத்தரம் / AaniUthram Aani Utharam: July 12, 2024 ஆனி உத்தரம்: 12-07-2024 வெள்ளிக்கிழமை சிவபெருமானின் பெருமூர்த்தமாக சிவன் கோயில்களில் எழுந்தருளியிருக்கும் ஶ்ரீநடராசருக்கு எடுக்கப்படும் அபிஷேகம் வெகு சிறப்பு வாய்ந்ததாக அமைகிறது. ஆடல் வல்லான் ஆகிய நடராசப் பெருமான் திருமஞ்சனம் (அபிஷேகம்) கொள்ளும் மிக உயர்ந்த நாட்கள் ஆறு ஆகும். சித்திரை மாதத்தில் வரும் திருவோண நட்சத்திரம், ஆவணி, புரட்டாதி, மாசி ஆகிய மாதங்களில் வரும் பூர்வபட்ச சதுர்த்ததி ஆகிய வற்றில் பகலில் விசேட அபிஷேகம் நடைபெறும். ஆனி உத்திரம், மார்கழி திருவாதிரை ஆகிய தினங்களில் விசேட அபிஷேகத்தைத் தொடர்ந்து திரு வீதி உலா இடம் பெறும் |