Thursday 23 August 2018
Date:05/05/2024 - 05/05/2024 09:00-21:00
பிரதோசம் / Pirathosam

Pirathodam / பிரதோசம் 

2024

08,22 - 01, 07,21 - 02,  07,22 - 03, 06,20 - 04,
05,20 - 05, 05,19 - 06, 03,18,- 07, 01,16,30 - 08,
15,29 - 09, 14,29 - 10, 13,28 - 11,  12,28 - 12.

 

பிரதோசம் என்பது சைவ சமயத்தில் சிவபெருமானை வழிபட உகந்ததாகக் கருதப்படும் காலமாகும்.
இது ஒவ்வொரு மாதமும் வளர்பிறை, தேய்பிறை ஆகிய இரண்டு பட்சங்களிலும் வருகின்ற திரயோதசித் திதியில் சூரியன் மறைவதற்கு முன் மூன்றேமுக்கால் நாழிகையும், பின் மூன்றேமுக்கால் நாழிகையும் உள்ள பிரதோசகாலத்திற் சிவபெருமானை குறித்து அநுட்டிக்கப்படும் விரதமாகும்.

பிரதோஷ வேளையில் ஈசனை வலம் வரும் முறையை சோமசூக்தப் பிரதட்சணம் என அழைக்கிறோம்.

முதலில் நந்திதேவரைத் தரிசனம் செய்து அங்கிருந்து இடமாகச் சென்று சண்டீஸ்வரரைத் தரிசனம் செய்து, சென்ற வழியே திரும்பி நந்திதேவரை மீண்டும் தரிசனம் செய்ய வேண்டும். பிறகு மீண்டும், அங்கு நின்று வலமாகச் சென்று பராசக்தியாய் விளங்கும் கோமுகி எனப்படும் சிவபெருமானின் அபிஷேக நீர்வரும் துவார வழியைத் தரிசனம் செய்து, சென்ற வழியே திரும்பி வந்து நந்திதேவரை மீண்டும் தரிசனம் செய்து, அங்கு நின்றும் இடமாகச் சென்று சண்டீஸ்வரரைத் தரிசனம் செய்து, அங்கு நின்று சென்ற வழியே திரும்பி வந்து நந்திதேவரை தரிசனம் செய்யாது வலமாக சென்று,பராசக்தியாகிய கோமுகியைத் தரிசித்து மீண்டும் வந்த வழியே திரும்பி வந்து தேவரைத் தரிசியாது இடமாகச் சென்று சண்டீஸ்வரரைத் தரிசனம் செய்து, சென்ற வழியே திரும்பி வந்து நந்திதேவரை தரிசனம் செய்து பின்னரே சிவலிங்கத்தை தரிசனம் செய்ய வேண்டும்.

 

Back to event list