Saturday 27 April 2019
Date:30/04/2024 - 30/04/2024 09:00-21:00
நடேசர் அபிஷேகம் / Nadesar Abishekam

நடேசர் அபிஷேகம்: 2024

22-02,
30-04,
ஆனி உத்தரம் -  12-07,
18-8,
15-10
& (12-01- 2025)

சிவபெருமானின் பெருமூர்த்தமாக சிவன் கோயில்களில் எழுந்தருளியிருக்கும் ஶ்ரீநடராசருக்கு எடுக்கப்படும் அபிஷேகம் வெகு சிறப்பு வாய்ந்ததாக அமைகிறது. ஆடல் வல்லான் ஆகிய நடராசப் பெருமான் திருமஞ்சனம் (அபிஷேகம்) கொள்ளும் மிக உயர்ந்த நாட்கள் ஆறு ஆகும்.

ஓர் ஆண்டில் நடராஜருக்கு ஆறு நாட்கள் அபிஷேகம் நடத்தப்படும்.

1. சித்திரை மாதம் திருவோண நட்சத்திரத்தில் கனகசபையில், மாலையில் அபிஷேகம்

2. ஆனி மாதத்தில் உத்திர நட்சத்திரத்தில் இராச சபை என்னும் ஆயிரங்கால் மண்டபத்தில் உதயத்திற்கு முன் 4 மணிக்கு அபிஷேகம்

3. ஆவணி மாதத்தில் பூர்வ பட்ச சதுர்த்தசியில் கனக சபையில் மாலையில் அபிஷேகம்.

4. புராட்டாசி மாதத்தில் பூர்வ பட்ச சதுர்த்தசியில் கனக சபையில், மாலையில் அபிஷேகம்.

5. மார்கழி மாதத்தில் திருவாதிரை நட்சத்திரத்தில் இராச சபை என்னும் ஆயிரங்கால் மண்டபத்தில் உதயத்திற்கு முன் 4 மணிக்கு அபிஷேகம்

6. மாசி மாதத்தில் பூர்வ பட்ச சதுர்த்தியில் கனகசபையில் மாலையில் அபிஷேகம். அபிஷேகங்கள் நடைபெறும் போது நடராஜரை கண்டு வணங்கி வழிபடுவது மிகவும் நல்லது. விசேஷமானது.

Back to event list