Wednesday 18 October 2017
Date:12/10/2024 - 31/10/2024 09:00-21:00
Repeat Every Day
கேதாரகெளரி விரதம் /Kethara Gowri Viratham

கேதார கௌரி விரதம்
2024

12 /10 ~ 31/10

                    ஆரம்பம் :12-10-2024
                    நிறைவு: பாறணை - 31-10-2024

21 நாட்கள் நடைபெறுகின்றது.

ஆண்டுதோறும் கன்னி/புரட்டாதி மாதம் வளர்பிறை பதின்மை/தசமியில் சிவனின் அருள் வேண்டி இந்நோன்பு ஆரம்பிக்கப்படுகிறது.

கேதாரம்" என்பது இமயமலைச் சாரலில் உள்ள ஒரு சிவதலம். இத்தலத்தில் எழுந்தருளி இருக்கும் சிவனை நினைத்து பார்வதி தேவியாகிய "கௌரி' இவ் விரதத்தினை மேற்கொண்டதால் இப் பெயர் உண்டாயிற்று. சிவனுக்கு சமமான நிலையில் சக்திஅமையும் போது அது பராசக்தி எனப் போற்றப்படுகின்றது.
தென்நாட்டுச் சைவம் எனப்போற்றப்படும் சைவ சித்தாந்தம் கூறும் பரம்பொருள் சிவனாகும். சிவனின் அருள் வேண்டி அனுஷ்டிக்கப்படும் விரதங்கள் பல இருந்த போதிலும் கேதார கௌரி விரதம் பலவகையிலும் சிறப்புடைய விரதமாகக் கொள்ளப்படுகின்றது. பக்தர்கள் இவ்விரதத்தினை மன ஒருமைப்பாட்டுடனும்,  புனித நோக்குடனும் என்ன வரம் வேண்டி அனுஷ்டிக்கிறார்களோ அந்தந்த வரங்களை அம்பாளின் வேண்டுகோளிற்கு இணங்க சிவன் மிக விரைவாகவே கொடுத்து விடுவார் என்பது பலரதுஅனுபவ உண்மையாகும்.

 

Back to event list