06-08-2024 செவ்வாய்க்கிழமை
மாலை 5:30 மணியிலிருந்து அம்பாளுக்கு விசேட அபிஷேக பூசை
மாலை | 5.30 மணி | சங்கல்பம் | ||
| மாலை | 5.45 | நவகலச ஹோம பூசை | |
மாலை | ||||
அம்பாளுக்கு விசேட அபிஷேகம் | ||||
மாலை | 6.30 மணி | கூட்டுப்பிரார்த்தனை | ||
மாலை | 7.30 மணி | பூசை ஆரம்பம் | ||
வல்லவாம்பிகா தையல்நாயகி சமேத ஸ்ரீ வைத்தியநாத சுவாமி உள் வீதிவலம் வந்து அடியார்களுக்கு அருள்தருவார். | ||||
மாலை | 8.15 மணி | விபூதி பிரசாதம் வழங்கப்படும் |
Aadi Puuram is an important auspicious day to Amman. It is customary for Saivites, specially married couples and those waiting to choose good husbands or wife to settle in family life to participate in this special Abisheka Pooja to Vallavaambika Sri Thaiyalnayaki and obtain her blessings.
Following the Abishekam and Special Poosai starting at 5:30 PM to Ambaal, Vallavaambika Sri Thaiyalnayaki Sametha Vaithiyanatha Swami will come in parade to bless devotees . Devotees are kindly requested to attend this festival conducted once a year and get blessed by Ambaal.
ஆடிப் பூரம் அம்மனுக்குரிய விசேடமான புண்ணிய தினமாகும். இந்நன்னாளில் வல்லவாம்பிகா ஶ்ரீதையல்நாயகியை தம்பதியர் தமது இல்வாழ்வு சிறக்கவும் மணவாழ்வுக்காகக் காத்திருப்போர் தமக்குச் சிறந்த மணமகனோ அல்லது மணமகளோ வேண்டி இந்நாளில் நடக்கும் விசேட அபிஷேக பூசைகளில் கலந்து கொண்டு அம்பாள் அருள் பெறுவது சைவர்களின் பாரம்பரியமாகும்.
மாலை 5:30 மணியிலிருந்து அம்பாளுக்கு விசேட அபிஷேக பூசை நடைபெறும். பூசையைத்தொடர்ந்து வல்லவாம்பிகா ஶ்ரீ தையல்நாயகி சமேத வைத்தியநாத சுவாமி விதிவலம் வந்து அடியார்க்கு அருள்வார். வருடமொருமுறை நிகழும் இவ்விழாவில் கலந்து அம்பாள் அருள் பெறுமாறு அடியார்களை வேண்டுகிறோம்.
ஆடிப்பூரம்
ஆடிப்பூரம் என்னும் விழா ஆடி மாதத்திலே பூர நட்சத்திரம் உச்சத்தில் இருக்கும் போது கொண்டாடப்படுவது. இது தேவிக்குரிய திருநாளாகும். இந்த நாளில் தான் உமாதேவியும் தோன்றியதாக கூறப்படுவதுண்டு. உலக மக்களை காக்க சக்தியாக அம்பாள் உருவெடுத்தாள். சித்தர்களும், யோகிகளும் இந்த நாளில் தவத்தை துவக்குவதாக புராணங்கள் கூறுகின்றன.
ஆடி மாதம் என்பது தக்ஷிணாயன காலத்தின் தொடக்க காலம். இது வரை வடக்கு நோக்கி நகர்ந்து கொண்டிருந்த சூரியன் தனது தெற்கு நோக்கிய பயணத்தை தொடங்கும் மாதம். நம்முடைய ஒரு வருடம் தேவர்களுக்கு ஒரு நாள். அவர்களது இரவுக்காலமே இந்த தக்ஷிணாயன காலம் ஆகும். உத்தராயணக்காலம் சிவபெருமானை வழிபட உகந்தது என்றால் தக்ஷிணாயனம் அவரது வாம பாகத்தில் வீற்றிருக்கும் அம்பிகைக்கு உரிய காலம் ஆகும். அம்மனுக்கு உகந்த ஆடி மாதம், நவராத்திரி ஆகிய பண்டிகைகள் வரும் காலம்.
இவ்வாறு இது வரை பகல் காலம் அதிகமாக வெப்பமாக இருந்த நிலை மாறி இரவு அதிகமாகவும், வெப்பம் குறையும் காலம் ஆரம்பிப்பதால்தான் ஆடி மாதங்களில் எளிய உணவான கூழ் சாப்பிட்டால் உடம்பிற்கு நல்லது என்று ஜகன் மாதாவிற்கு கூழ் வார்க்கும் பழக்கத்தை ஏற்படுத்தினர் நமது முன்னோர்கள். இந்த ஆடி மாதத்தில் வெள்ளி, செவ்வாய் , ஞாயிறுகளில் அன்னையை வழிபட எல்லா நலன்களும் தந்து அருளுவாள் அந்த தயாபரி. இவ்வளவு சிறப்புகள் கொண்ட ஆடி மாதத்தில் வரும் பூர நாள் அம்பிகைக்கு மிகவும் உகந்த நாள்.
தாய்மை என்பது பெண்களுக்கே உரித்தான ஒரு தனி சிறப்பு. உள்ளே உயிர் வளர்த்து உதிரத்தால் பால் கொடுக்க ஒரு தாயால்தான் முடியும். நம்முடைய மானிட வழக்கமான சூல் கொண்ட பெண்ணுக்கு வளை காப்பு நடத்துவது போல படைக்கும் அன்னையாய் இருந்தும் கன்னி என்று மறைகள் பேசும் அம்பிகைக்கு நாம் வளைகாப்பு நடத்தி கண்டு களித்திடும் நாள்.