12-07-2024  வெள்ளிக்கிழமை
  July 12, 2024  Friday

காலை5.30 மணிசங்கல்பம்
நவகலச ஹோம பூசை
நடராசப் பெருமானுக்கு விசேட அபிஷேகம்
காலை6.30 மணிகூட்டுப்பிரார்த்தனை
காலை7.00 மணிகாலைப் பூசை
நடராசபெருமான் உள் வீதிவலம் வந்து அடியார்களுக்கு அருள்தருவார்
பிரசாதம் வழங்கப்படும்

Dear Devotees,
This is one of the six “Thirumanchanams” of Lord Natesar.  On this auspicious day special Abisheka will be performed  to Sri Sivakamasundari Sametha Sri Natesa Peruman, followed by special Pooja. He will provide Tharshan to devotees while coming around the inner court of Temple.
Devotees are kindly requested to attend this Special Pooja to get blessed by Lord Natesar.

ஆனி மாதத்தின் உத்தர நட்சத்திரத்தில் வரும் இத்தினத்தில் உதயத்தில் நடராஜ தரிசனம் செய்யப்பட வேண்டும்.

இந் நன்நாள் நடேசப்பெருமானின் ஆறு திருமஞ்சனங்களில் ஒன்றாகும்.
இச்சிறப்பு மிகு நன் நாளில் ஒட்டாவா சிவன் கோயிலில் வீற்றிருக்கும்
ஸ்ரீ சிவகாமசுந்தரி சமேத ஸ்ரீ நடேசப்பெருமானுக்கு விசேட அபிஷேக ஆராதனையுடன் பூசையும் நடைபெற்று
அடியவர்களுக்கு ஆனி உத்தர தரிசனம் தந்து உள்வீதி வலம் வந்து
அருளுவார்.
அடியவர்கள் அனைவரும் சைவ சீலர்களாக கோயிலுக்கு வந்து இறையருள் பெற்றுய்யுமாறு வேண்டுகிறோம்.

இறைவன் தனது அடியார்களுக்காகத் தில்லையில் நடராஜா என்ற நாமத்துடன் திரு நடனம் புரிந்தது ஆனி உத்தரத் திருநாளிலாகும். இத்திரு நடனத்தின் மூலம் இறைவன் பஞ்ச கிருத்தியங்களையும் நிகழ்த்திக் கொண்டிருக்கிறார்.

ஆனி உத்தர தினத்தில் இரவு நடேஷர் அபிஷேகம் நடைபெற்று உதயத்தில் ஆனி உத்தர தரிசனம் நிகழும் பக்தர்கள் இரவிரவாக பொங்கல் பொங்கி மோதகம் வடை முறுக்கு என்று பலதும் படைப்பார்கள். நடராஜருக்கு மிகப்பெரிய அளவில் அபிஷேகம் ஆராதனை என்று விசேட பூஜைகள் நடக்கும்.