2024
ஆடிச் செவ்வாய்  : 16/7, 23/7, 30/7, 6/8 & 13/8
Aadi chevvay: 16/7, 23/7, 30/7, 6/8 & 13/8
Importance of Tuesday in the Tamil Month Aadi Aadi Chevvai, or Sevvai, is the Tuesdays in the Tamil Month Aadi and it is considered highly auspicious for the worship of Goddess Shakti. 
The month is considered inauspicious by many Hindus as the Dakshinayana begins in this month. But the month is also of great significance to Shakti worshippers.
ஆடிச்செவ்வாய் விரதம் துர்க்கை, முருகனுக்குரிய விரதமாகும். முருகப் பெருமானின் அவதாரமே செவ்வாய்க் கிரகம் என்று சோதிட நூல்கள் கூறுகின்றன. செவ்வாய்க் கிழமைகளில் இராகு காலத்தில் மாலை 3 மணி தொடக்கம் 4:30 மணிவரை உள்ள காலத்தில் துர்க்கையை பூசிப்பது விசேடமானது என்று இந்துக்கள் கருதுகிறார்கள். பத்திரகாளி இராகுவாக அவதாரம் செய்தார் என்பர்.

செவ்வாய் தோஷத்தாலும், நாகதோஷத்தாலும் திருமணம் தடைப்பட்டவர்கள், குழந்தைப் பாக்கியம் இல்லாதவர்கள் செவ்வாய்க் கிழமைகளில் இராகுகாலப் பூசைகளில் பங்குபற்றுதல் நல்லது என்ற கருத்தும் உண்டு. ஆடிச்செவ்வாயில் மட்டுமன்றிப் பொதுவாகச் செவ்வாய்க் கிழமைகளில் முருகப் பெருமானை வேண்டி விரதம் கடைப்பிடிப்பதும் உண்டு.
ஆடிச் செவ்வாய் தேடிப் பிடி”
தமிழ் மாதங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு சிறப்பு உள்ளது. எனினும் இவை அனைத்தைக் காட்டிலும் ஆடி மாதம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

பொதுவாக ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதமாகக் கருதப்படுகிறது. ஆடி மாதத்தில், சூரியன் கடக ராசியில் சஞ்சரிக்கிறான். கடகம் இராசி சந்திரனின் ஆட்சி வீடாகும். சிவ அம்சமான சூரியன் சக்தி அம்சமான சந்திரனின் ஆட்சி வீட்டினுள் சஞ்சரிப்பதால் (ஒன்று சேருவதால்), சந்திரன் ஆழுமைப் பலம் அடைகிறது. அதாவது சக்தியின் பலம் அதிகரிக்கின்றது. ஆடி மாதத்தில் மட்டும் சிவன் சக்திக்குள் அடக்கமாகி விடுகிறார்.

தமிழ் ஆண்டின் 4வது மாதமான ஆடி, தட்ஷிணாயனப் புண்ணிய காலத்தின் தொடக்கமாகவும் உள்ளது. அதாவது ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரை தட்சிணாயன புண்ணிய காலம் எனவும், தை முதல் ஆனி முடிய உத்திராணயன புண்ணிய காலமாகவும் கருதப்படுகிறது.