மகா சிவராத்திரி : 08-03-2024 – வெள்ளிக்கிழமை
Maha Sivarathri : Friday March 08, 2024




Dear Devotees,
By the grace of Lord Siva, Special Abishekam and Poojas for Mahasivarathri will be conducted in Ottawa Sivan Temple on
Friday March 08, 2024

சிவனடியார்களே!
ஒட்டாவா சிவன் ஆலயத்தில் மகாசிவராத்திரி  இவ்வருடம் மாசித்  திங்கள் 25ம்நாள், (08-03-2024) வெள்ளிக்கிழமை நடைபெற இறையருள் கூடியுள்ளது. மாலை 5.30 மணிதொடக்கம் அடுத்தநாள் அதிகாலை 5.30 மணிவரை மகா சிவராத்திரி வெகுசிறப்பாக எம்பெருமான் ஸ்ரீ வைத்தியநாத சுவாமிக்கு நான்கு கால விசேட அபிஷேக பூசைகள் நடைபெறும்.

அடியார்களே அன்றைய தினம் கோயிலுக்கு வருகை தந்து நான்கு காலமும் நடைபெறும் விசேட அபிஷேக பூசைகளில் பங்கு கொண்டு எம்பெருமான் அருள் பெறுவீர்களாக

முதலாம் சாமம் 

மாலை  5.30 மணி     உபயகாரர் சங்கல்பம், நவகலச ஹோம பூசை 
  சிவன் / அம்மன் விசேட அபிஷேகம், நவகலச – ஹோம பூசை
  சிவனுக்கும் அம்பாளுக்கும் கலசாபிஷேகம்.
மாலை7.30 மணி  முதலாம் சாமப் பூசை
  விபூதிப் பிரசாதம் வழங்கல் ,
  அடியார்கள் வசந்த மண்டபத்தில் உள்ள சிவலிங்கத்துக்கு 
   பால் அபிஷேகம் செய்தல்

இரண்டாம் சாமம் 

மாலை 8.30 மணி  உபயகாரர் சங்கல்பம், நவகலச ஹோம பூசை 
  சிவனுக்கு விசேட அபிஷேகம், நவகலச – ஹோம பூசை
  சிவனுக்குக் கலசாபிஷேகம்
இரவு10.00 மணி    இரண்டாம் சாமப் பூசை
    விபூதி  பிரசாதம்  வழங்கல் 

மூன்றாம் சாமம்

இரவு10.30 மணி  உபயகாரர் சங்கல்பம், நவகலச ஹோம பூசை 
  சிவனுக்கு விசேட அபிஷேகம், நவகலச – ஹோம பூசை
  சிவனுக்குக் கலசாபிஷேகம்
நள்ளிரவு  12.00 மணி   மூன்றாம் சாமப் பூசை
  லிங்கோத்பவ தரிசனம்
  விபூதிப் பிரசாதம் வழங்கல்

நான்காம் சாமம் 

பின்னிரவு2.30 மணி   உபயகாரர் சங்கல்பம், நவகலச ஹோம பூசை 
  சிவனுக்கு விசேட அபிஷேகம், நவகலச – ஹோம பூசை
   சிவனுக்குக் கலசாபிஷேகம்
அதிகாலை 4.00 மணி  நாலாம் சாமப் பூசை
    விபூதி பிரசாதம்  வழங்கல்
அதிகாலை 5.00 மணி   சிவனுக்கு விசேட பால் அபிஷேகம்
அதிகாலை5.30 மணி அதிகாலைப் பூசை
  அடியார்க்கு பாறணைப் பிரசாதம் வழங்கல்
   விபூதி  பிரசாதம்  வழங்கல்

நான்கு காலத்துக்கும்  அர்ச்சனை செய்ய விரும்பும் அடியார்கள் கோயில் பணிமனையில் பதிவு செய்யுங்கள்.

அடியார்கள் வசந்த மண்டபத்தில் உள்ள சிவலிங்கத்துக்கு பால் அபிஷேகம் செய்ய மாலை 7:30 – 11:30 வரை ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.


Abisheka Pooja details are as follows:

First Saama Pooja

5.30PMSankalpam, Special Abishekam to Lord Siva, Nava-Kalasa Homa Pooja
Kalasa Abishekam to Lord Siva
7.30PMFirst Saama Pooja
  Distribution ofVibuti Prasatham
Milk Abishekam to Sivalingam  by devotees

Second Saama Pooja

8.30PMSankalpam, Special Abishekam to Lord Siva, Nava-Kalasa Homa Pooja
Kalasa Abishekam to Lord Siva.
10.00PMSecond Saama Pooja
  Distribution of Pirasatham


Third Saama Pooja

10.30PMSankalpam, Special Abishekam to Lord Siva, Nava-Kalasa Homa Pooja
Kalasa Abishekam to Lord Siva..
12.00MNThird Saama Pooja
  Lingothpava Tharisanam
Distribution ofVibuti Prasatham

Fourth Saama Pooja

2.30AMSankalpam, Special Abishekam to Lord Siva, Nava-Kalasa Homa Pooja
Kalasa Abishekam to Lord Siva.
4.00AMForth Saama Pooja
  Distribution of Pirasatham


மகாசிவராத்திரி :

அமாவாசைக்கு முதல் நாள் மாதசிவராத்திரி ஆகும். மாசி மாதத்தில் அமாவாசைக்கு முன் வரும் சிவராத்திரி நாள், மகாசிவராத்திரி ஆகும்.

இவ்விரதத்தைப் பற்றிய ஐதீகங்கள் பல உள்ளன. ஒரு காலத்தில் உலகப் பிரளயத்தின் போது உயிர்கள் எல்லாம்சிவபெருமானிடத்தில் ஒடுங்கின. உலகங்களே தோன்றவில்லை. இந்த நிலையில் எல்லையில்லாக் கருணையுடைய அம்பிகை அண்டங்கள் தோன்றி இயங்கும் பொருட்டு இறைவனை இடைவிடாது தியானம் செய்தாள். அப்போது இறைவன் தன்னுள் ஒடுங்கி இருந்த உலகங்களை மீண்டும் உண்டாகச் செய்து உயிர்களையும் படைத்தருளினார். அப்பொழுது உமையவள் சுவாமி நான் தங்களை மனதில் தியானித்துப் போற்றிய காலம் “சிவராத்திரி” என்று பெயர் பெறவேண்டும் என்றும் அதனைச் சிவராத்திரி விரதம் என்று யாவரும் கடைப்பிடிக்கவேண்டும் என்றும் அதைக் கடைப்பிடிப்பவர்கள் எல்லா

நலன்களும் பெற்று முக்தியடைய வேண்டும் என்றும் பிரார்த்தித்தார். இறைவனும் அவ்வாறே என்று அருள் புரிந்தார். அம்பிகையைத் தொடர்ந்து நந்தியம் பெருமான், சனகாதி முனிவர் சிவராத்திரி விரதம் அனுஷ்டித்து தங்கள் விருப்பம் நிறைவேறப் பெற்றனர்.

ஓம் நமச்சிவாய!