புதிய சிவன் கோயில் கட்டுமானம்- கலந்து உரையாடல்

அன்பார்ந்த சிவபக்தர்களே,

ஒட்டாவா சிவன் கோயிலின் புதிய கோயில் திட்டத்தின் ஆரம்ப திட்டமிடல் வேலைகள் முடிவடைந்த இந்த நிலையில் சிவனடியார்களுடன் ஒரு சிறப்பு கலந்துரையாடல் நிகழ்வுக்கு உங்களை அன்புடன் அழைக்கிறோம்.

இந்த நிகழ்ச்சி, நாம் அனைவரும் குமுகமாக ஒன்றுகூடி, கோயில் கட்டுமான திட்டம், அதன் கால, வேலை எல்லைகள், நெடுங்கால நிலைப்புறுதி பற்றிய விடயங்களை பகிர்ந்து கொண்டு, திட்டத்தின் பல்வேறு கூறுகளை அனைவரும் மீள்பார்வை செய்து, ஒவ்வொருவரின் கருத்தையும் கேட்டு முடிவெடுப்பதற்கு ஏதுவாக ஏற்பாடு செய்யப் பட்டிருக்கிறது.

நிகழ்ச்சி விவரம்:
நாள்: 19 / யூன் / 2024, புதன் கிழமை
நேரம்: மாலை 6.30 – 9.30
இடம்: உணவு வளாகம், வால்ட்டர் பேக்கர் விளையாட்டு மையம், பார்ஹேவன்.. (Food Court, Walter Baker Sports Center, Barrhaven)

1) திட்டமிடல்: துவக்கநிலைப் படிகளையும் தேவையான ஆயத்தங்களையும் எடுத்துக் கூறல்.

2) திட்ட வரைவு: கால, வேலை மைல் கற்களைப் பற்றிய கலந்தாடல்.

3) நிலைப்புறுதி: புதிய கோயிலின் நெடுங்கால நிலைப்பை உறுதி செய்யும் திட்ட விளக்கங்கள்.

இந்நிகழ்ச்சியானது அனைவரின் கருத்துகளை அறியவும், குறிக்கோள்களைப் பகிரவும், புதிய கோயில் கட்டுமானப்பணியை தொடங்குவதற்கான ஒருமித்த கருத்தை உருவாக்கவும் அமையும் நல்வாய்ப்பாகும்.

இந்த கலந்துரையாடலில் தாங்கள் கலந்துகொண்டு கருத்துகளை அறியத் தர வேண்டுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

மேல்விவரங்களுக்கும் கேள்விகளுக்கும் எம்மைத் தொடர்பு கொள்ளவும்
.=============================

Meet and Greet with Devotees – New Temple Development

Dear Devotees,

By the grace of Ottawa Sivan, we are excited to annouce that we are ready to embark on building our new temple. We warmly invite you to a special ‘Meet and Greet’ event to celebrate and discuss this significant milestone.

This session aims to bring our community together to share and review our planning, roadmap, and sustainability of the project, ensuring that everyone’s voice is heard in the decision-making process.

Event Details:
Date: Wednesday, June 19, 2024
Time: 6:30 – 9:30 PM
Location: Food Court, Walter Baker Sports Center, Barrhaven

During this meeting, we will cover the following key topics:
-Planning: Outline the preliminary steps and necessary preparations.

Roadmap: Discuss the timeline and key milestones

Sustainabilty: Plans to ensure the project’s long-term sustainability.

It is an opportunity for us to gather input, share ideas, and align our collective vision for the new temple.

We look forward to your participation and valuable input as we embark on this divine journey together.

Feel free to reach out if you have any questions or require further information.

With warm regards