பங்குனி உத்தரம் 

ஞாயிற்றுக்கிழமை 24 – 03 – 2024

மாலை5.30 மணிஉபயகாரர் சங்கல்பம், முருகனுக்கு பால் அபிஷேகம்
நவகலச ஹோம பூசை, சிவன் / அம்மன் கலச அபிஷேகம்
அலங்காரம்
மாலை7.00 மணிகூட்டுப் பிராத்தனை
மாலை7.45 மணிவிசேட மாலைப்பூசை , நைவேத்தியம்
ஶ்ரீதையல்நாயகிசமேத வைத்தியநாதசுவாமி உள்வீதி வலம் வந்து அடியார்களுக்கு அருளல்
  விபூதி பிரசாதம்  வழங்கல்


Panguni Uthiram


Sunday March 24, 2024

will be celebrated this year on Sunday March 24, 2024.
As Sri Deivayanai married Lord Subramanya on this day, it is an important festival for Lord Subramanya devotees. Also as on this day Goddess Mahalakshmi incarnated on the Earth during legendry churning of the Milky Ocean.

 

5.30PMNava kumba poosai begins
6.00PMSpecial Abishekam to Lord Murugan
7.30PMEvening Special Poosai starts
8.00PMVasantha Mandapa Poosai to murugan & Procession of Lord Murugan along with Valli and Theivanai to bless devotees.
8.30PMDistribution of Pirasatham

ஒவ்வொரு வருடத்திலும் பங்குனி மாதத்தில் வரும் உத்தர நட்சத்திரத்தில் பூரணை உடன் சேர்ந்து கன்னி ராசியுடன் வருகின்ற நாள் பங்குனி உத்தர நாளாக சிறப்பு பெற்றுள்ளது.

சிவன் கோவில்களிலும் முருகன் கோவில்களிலும் பங்குனி உத்தர விரதம் சிறப்பாக நடை பெறுகின்றது. அன்றைய தினம் விரதமிருந்து இரவில் பால், பழம், பாயாசம் உண்பது நல்லது.
அப்படி விரதமிருக்க முடியாதவர்கள் ஒரு நேரம் மட்டும் உணவருந்தி விரதமிருக்கலாம்.
இந்நாளில் பல தெய்வாம்சம் பொருந்திய சம்பவங்கள் நடந்துள்ளதால் இத்தினம் இறை வணக்கத்திற்கு உரிய ஒரு நாளாக கொள்ளப்படுகிறது.

மதுரை மீனாட்சி அம்மன் சுந்தரேசப்பெருமானின் திருமணமும் இந்நாளிலேயே நடைபெற்றது. அதனால் இந்நாளை கல்யாண சுந்தர விரதமெனவும் அழைப்பார்கள்.

பங்குனி உத்தரம் என்பது சைவக் கடவுளாகிய முருகனுக்குரிய சிறப்பு விரத தினமாகக் கொண்டாடப்படுகிறது. தமிழ் மாதங்களில் 12ம் மாதம் பங்குனி. நட்சத்திரங்களில் 12ம் நட்சத்திரம் உத்தரம். எனவே 12 கை வேலவனுக்குச் சிறப்பான தினமாகக் கொண்டாடப்படுகிறது.
அநேகமான முருகன் கோயில்களில் இத்தினத்தில் வருடாந்த திருவிழாக்கள் (மஹோற்சவம்) நடைபெறும்.