Skip to content Skip to footer

சிவனடியார்களே!!

புரட்டாதிச் சனி விரதம் 2024


September / புரட்டாதி: 21 & 28
October / ஐப்பசி: 5 & 12

ஒட்டாவா சிவன் ஆலயத்தில்  புரட்டாதிச் சனி விரதம்  இவ்வருடம் புரட்டாதித் திங்கள் 5ம்நாள் சனிக்கிழமை  21-09-2024 ஆரம்பமாகி நான்கு சனிக்கிழமைகள் நடைபெற  இறையருள் கூடியுள்ளது. 
புரட்டாதிச் சனி  விரதம்  12-10-2024 சனிக்கிழமையுடன் நிறைவடைகின்றது.


பக்தர்களின் வசதிக்காக   புரட்டா தி சனிக்கிழமைகளில் காலை  9.00  மணி தொடங்கி மாலை  9.00  மணி  வரை சிவன்  கோயில் திறந்திருக்கும்.


சூரியகிரகணதன்று 14-10-2023 திகதி பக்தர்களின் வசதிக்காக காலை  8.00  மணி முதல் 11.30 மணிவரையும் பின்பு மதியம் 2.00 மணி முதல் மாலை  9.00  மணி  வரை சிவன்  கோயில் திறந்திருக்கும்.

சனி பகவானின் தீய பார்வையில் இருந்து மீளவும் எமது வாழ்வை நன்கு மேம்படுத்தவும் புரட்டாதி சனிக்கிழமைகளில் சுட்டிகளில் கறுப்பு எள்ளு கறுப்புத்துணியில் கட்டி நல்லெண்ணையில் விளக்கேற்றி  நவக் கிரகங்களை  வணங்குவது மரபு.
சுட்டி, கறுப்பு எள், நல்லெண்ணைய் ஆகியன கோயிலில் கிடைக்கும். 
சனி பகவானுக்கு பக்தர்கள் குருக்கள் மூலம் நீர் ஊற்றி வழிபடவும்   வசதிகள்   செய்யப்பட்டுள்ளன.
அத்தருணம் அடியார்கள் அனைவரும் ஆலையத்துக்கு வருகைதந்து இறையருள் பெறுவீராக.

நவக்கிரகங்களை வழிபட புரட்டாசி

சனிக்கிழமைகள் விசேடமான தினங்களாகும். நவக்கிரகங்கள் எமது வாழ்வில் முக்கியமான மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. கிரகங்களும் அவை ஆட்சி செய்யும் துறைகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

சூரியன் : தன்நம்பிக்கை, அதிகாரம், தகுதி

சந்திரன் : மனம், உணர்ச்சி

செவ்வாய் அல்லது அங்காரகன் : தைரியம், கெட்டித்தனம், உடற்சுகம், பிள்ளைகள்

புதன் : புத்தி, கல்வி கற்பதும் கற்பிப்பதும்

வியாழன் அல்லது குரு : சமயப்பற்று, செல்வாக்கு, பெண்களின் மணவாழ்வு

வெள்ளி அல்லது சுக்கிரன் : சுகவாழ்வு, கலை, கலாச்சாரம், அழகானசூழல்

சனி : நீண்ட ஆயுள், களேபரங்கள், கஷ்டங்கள், ஆத்மீகம்

ராகு, கேது : உலக ஆசைகள், மோட்சம் (சுதந்திரம்)

சனி பகவானின் தீய பார்வையில் இருந்து மீளவும் எமது வாழ்வை நன்கு மேம்படுத்தவும் புரட்டாசி சனிக்கிழமைகளில் சுட்டிகளில் கறுப்பு எள்ளு கறுப்புத்துணியில் கட்டி நல்லெண்ணையில் விளக்கேற்றி நவக்கிரகங்களை வணங்குவோம். சுட்டி, கறுப்பு எள், நல்லெண்ணை ஆகியன கோயிலில் கிடைக்கும்.
சனி பகவானுக்கு பக்தர்கள் நீர் ஊற்றி வழிபடவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

பக்தர்களின் வசதிக்காக புரட்டாசி சனிக்கிழமைகளில்
காலை 9.00 மண தொடங்கி மாலை 9.00 மணிவரை சிவன் கோயில் திறந்திருக்கும்.

குறிப்பு: புரட்டாசிச் சனிக்கிழமைகளில் பகல் 12.00 மணி மதிய பூசையைத் தொடர்ந்து சிவனடியார்களுக்கு அன்னதானம் வழங்கப்ப்படும்.
சூரியகிரகணத்தன்று 14-10-2023 அன்னதானம் வழங்கப்படமாட்டாது.

ஓம் நமச்சிவாய!

These planetary deities play a significant role in our lives in the following aspects as given below:

Sun: Governs confidence, authority and status;

Moon: Presiding deity of mind and emotions;

Sevai or Angarakan: Governs courage and bravery and presides over health and siblings.

Budha: Mercury Presides over intelligence and capacities of teaching;

Viyalan or Guru: Presiding deity of religious inclination and prosperity and married life of women;

Velli or Sukran: Venus presides over comforts, arts, culture, aesthetics and love;

Sani: Presiding deity of longevity, calamities and difficulties apart from spiritual wisdom;

Rahu & Kethu: Presiding deities of worldly desires and moksha (freedom).

To seek relief from any negative aspect of Sani Bhagawan and enhance general welfare, we worship Navagraha on Purattasi Sani days by lighting ‘Chutti’ with black sesame seeds wrapped in black cloth to burn in sesame seed oil. These are available at the Sivan temple counter.

Facilities are also made for devotees to pour water and worship Sani Bagawan on these days.

Temple will be kept opened from 9.00AM to 9.00PM on Purattasi Sani days for the convenient of devotees.

Note: Following the 12.00 Noon Poosai “Annathaanam” (Lunch) will be provided to Sivan devotees on ‘Purataasi Sani’ days.
Please note that Annathaanam will not be provided on Saturday October 14, 2023

E-mail
Password
Confirm Password