சனிப் பிரதோஷம் : 2024

சித்திரை: 6 & 20
மார்கழி: 28

 

மாலை5.30 மணி நந்தியெம்பெருமானுக்கும் வைத்தியநாத சுவாமிக்கும்  விசேட அபிஷேகம்
மாலை6.30 மணிவிசேட பிரதோஷ பூசை
மாலை7.00 மணிதையல்நாயகி சமேதராய் வைத்தியநாத சுவாமி வீதி  வலம் வந்து அடியார்க்கு அருள்வார்.
மாலை7.30 மணி வீபூதி பிரசாதம்  வழங்கல்
8.00 மணி மாலைப் பூசை

Sani Pradosham  

April: 6 & 20
December: 28

SaniPradosham is a bimonthly occasion on the thirteenth day of every fortnight in the Hindu calendar. It is closely connected with the worship of Hindu god Shiva. The auspicious 3 hour period, 1.5 hours before and after the sunset is one of the optimum time for worship of Shiva. The fast or vow performed during the period is called “Pradosha vratam” A devotee should wear rudraksha, Vibhuti and worship Shiva by abhishek, sandal paste, Bael leaves, fragrance, deepa and naivedya.

5.30PMSpecial Abishekam to Nanthi & Lord Siva.
6.30PMSpecial Pirathosha Poosai
7.00PMProcession of Lord Siva along with Ambal to bless devotees.
7.30PMDistribution of Pirasatham
8.00PMEvening pooja

சிவாலயத்தில் பிரதோஷ தரிசனம் தொடர்ந்து செய்து வந்தால் முன் ஜென்ம பாவ வினைகள் கரைந்தோடும் என்பது ஐதீகம். சனிக்கிழமைகளில் வரும் பிரதோஷம் என்பது சனிப்பிரதோஷம் என்று சிறப்பாக வழிபாடு செய்யப்படுகின்றது. இருபது வகையான பிரதோஷ வழிப்பாட்டு முறைகள் ஆகமங்களில் கூறப்படுகிறது. இருப்பினும் சனிப்பிரதோஷம் ஆலயங்களில் விமரிசையாக வழிபாடு நடத்தப்படுகின்றது. தினப்பிரதோஷ நேரம் என்பது ஒவ்வொரு நாளும் மாலை மணி 4.30 முதல் 6.00 வரையிலான நேரம் ஆகும். |

இந்த தினப்பிரதோஷ நேரம் என்பதே இந்த சனிப்பிரதோஷ சம்பவத்தினால்தான் உருவானது. மிகவும் புண்ணியமான இந்த நேரத்தில் நாம் எந்த ஒரு மந்திரம் ஒரு முறை ஜபித்தாலும், அது பலகோடி மடங்கு ஜபித்ததற்கான புண்ணியத்தைத் தரும். சிவபெருமானுக்கும் அவரின் வாகனமான நந்திதேவருக்கும் உரிய அற்புதமான நாளில், பிரதோஷ வேளையில் சிவாலயங்களுக்குச் செல்வதும் அபிஷேகப் பொருட்களும் மலர்களும் சமர்ப்பித்து தரிசிப்பதும், பாவங்களைப் போக்கி, புண்ணியங்களைத் தந்தருளும் என்கின்றன புராணங்கள்!

ஒரு சனிப்பிரதோஷத்தன்று சிவாலயம் சென்றால், ஐந்து வருடங்கள் தினமும் சிவாலயம் சென்று வந்த புண்ணியம் கிடைக்கும் என அனுபவம் மிக்க சிவனடியார்கள் தெரிவிக்கின்றனர். சாதாரண பிரதோஷ வழிபாடு தரும் பலன்கள் போன்று ஆயிரம் மடங்கு பலன் தரக்கூடியது இந்த சனி பிரதோஷம். சனிக்கிழமையில் வரும் பிரதோஷம் சனி பிரதோஷம் என்று அழைக்கப்படுகிறது. ஈஸ்வரனையும், சனிஸ்வரனையும் அன்று விரதமிருந்து வழிபடுவதால் சனி பிரதோஷத்துக்கு கூடுதல் சிறப்பு உண்டு. சிவபெருமான் தேவர்களை காப்பாற்ற ஆலகால நஞ்சை உண்ட நாள் சனிக்கிழமை. எனவே, பிரதோஷ நேரம் சனிக்கிழமை அன்று வரும் சனி பிரதோஷம் என சிறப்பு பெறுகிறது.

சனிப்பிரதோஷ நாளில் சிவனாரை தரிசிக்கிற வாய்ப்பை நழுவ விடாதீர்கள். சொல்லப்போனால், அப்படியான வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்ளுங்கள்! சனிப்பிரதோஷ நாளில், அந்த வேளையில் அதாவது மாலையில் சிவாலயம் சென்று, நமசிவாய நாமத்தைச் சொல்லுங்கள். சிந்தையில் தெளிவும் வாழ்வில் நிம்மதியும் கிடைக்கப் பெறலாம்!