2024
January 15 , தை 15

Monday / திங்கட்கிழமை

சிவனடியார்களே!!

ஒட்டாவா சிவன் ஆலயத்தில் தைப் பொங்கல் இவ்வருடம் தை மாதம்1 ம் திகதி, (15/01/2024) திங்கட்கிழமை  நடைபெற  இறையருள் கூடியுள்ளது.

காலை6.30 மணி கோயிலில் பொங்கல் வைத்தல் .
காலை9.00 மணி சூரிய பகவானுக்கு விசேட அபிஷேகம், அலங்காரம்.
விஷேட காலைப் பூசை.
சூரியபகவானுக்குப் பொங்கல் படைத்தல் .
அனைத்துத் தெய்வங்களுக்கும் பொங்கல்சிறப்பு பூசை .
விபூதி பிரசாதம் வழங்கல் .

Dear Devotees!!

Thaipongal will be conducted this year on Monday January 15, 2024 at Ottawa Sivan Temple

6.30AM Pongal begins
9.30AM Special Abishekam & Alankaram to Deity SUN
Special morning pooja.
Offering Pongal to Deity SUN.
Offering Pongal to all Deities.
Prasadham Distribution
Devotees are kindly requested to visit the temple on this auspicious day and get blessed by Lord Shiva

சிவனடியார்களே!!

தை 1 அன்று தமிழர்களால் சிறப்பாக கொண்டாடப்படும் ஒரு தனிப்பெரும் விழா. அறுவடை காலத்தில் நல்ல மழை பெய்யவும், நாடு செழிக்கவும் பெண்கள் இந்த விரதத்தைக் கடைப்பிடித்தார்கள். . நல்ல விளைச்சல் கொடுத்தமைக்காக பூமி, சூரியன், உதவிய மாடு போன்றவற்றிற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சர்க்கரைப் பொங்கல் படைத்து வழிபட்டனர். இதுவே நாளடைவில் கொண்டாடும் பொங்கல் திருநாள் கொண்டாட்டமாக மாறியது.

பொங்கல் விழா, மக்களால் இயல்பாகக் கொண்டாடப்படுகிறது. உழைக்கும் தமிழ் மக்கள் தாமே கண்டுணர்ந்து, தமது உழைப்பிற்கு உதவிய இயற்கை சக்திகளுக்கும், தம்மோடு சேர்ந்து உழைத்த கால்நடைகளுக்கும் தமது நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவிக்கும் விழா. உழவர்கள் மழையின் உதவியால் ஆடி மாதம் முதல் உழைத்துச் சேர்த்த நெல்லை மார்கழியில் வீட்டிற்குக் கொண்டு வந்து தமது உழைப்பின் பயனை நுகரத் தொடங்கும் நாளே தைப்பொங்கல்.