Thaipoosam 2023 – Saturday February 04, 2023
+++++++++++++++
தைப்பூசம் – 2023 – சனிக்கிழமை 04-02-2023
சிவனடியார்களே!!
ஒட்டாவா சிவன் ஆலயத்தில் தைப்பூசம் இவ்வருடம் தைத்திங்கள்22 ம் திகதி, (04-02-2023) சனிக்கிழமைநடை பெற இறையருள் கூடியுள்ளது. அன்றைய தினம் முருகப் பெருமானுக்கு விசேட அபிஷேகம் நடைபெறும்.
மாலை | 5.30 மணி | நவகும்ப பூசை ஆரம்பம் |
மாலை | 6.00 மணி | முருகப் பெருமானுக்கு விசேட அபிஷேகம் |
மாலை | 7.30 மணி | விசேட மாலைப்பூசை ஆரம்பம் |
மாலை | 8.00 மணி | வசந்த மண்டப பூசையைத் தொடர்ந்து முருகப்பெருமான் வள்ளி தெய்வானை சமேதராய் வீதி வலம்வந்து பக்தர்களுக்கு அருளுவார் |
மாலை | 8.30 மணி | விபூதி, பிரசாதம் வழங்கல் |
இவ்வரிய நன்நாட்களில் ஆலய தரிசனம் செய்து இறையருள் பெறுவீர்.
தைப்பூசம் என்பது உலகெல்லாம் கட்டிக்காக்கும் அன்னை பராசக்தி
பரமசிவன் மைந்தன் முருகப் பெருமானுக்கு கொண்டாடப்படும்
விழாவாகும். தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும்.
முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம் என்பர். தைப்பூசம்
ஆண்டுதோறும் தை மாதம் (தமிழ் பஞ்சாங்கப்படி பத்தாவது மாதம். இது பூசா மாதம் என்றும் அறியப்படும்) பூச நட்சத்திரமும் பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகனுக்கு எடுக்கப்படும் விழாவாகும். நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரமாகும். இவ்விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது.
தைப்பூசத்தன்று தான் உலகம் தோன்றியதாக ஐதீகம்.
முருகன் தமிழ்க்கடவுள்.ஆவார்.முருகன் என்றால் அழகு என்று பொருள். முருகன் தேவ சேனாதிபதி (தேவர்களின் சேனாதிபதி) ஆகையால் இவர் ஒரு போர்க்கடவுள் ஆவார். தை பூசத்தன்று முருகன் தருகாசுரனை வதம் செய்த நிகழ்வு ஒரு விழாவாக பழனியில் அனுஷ்டிக்கப் படுகிறது.
சிவபெருமான் உமாதேவியுடன் இருந்து சிதம்பரத்தில் ஆனந்த நடனம் ஆடி, தரிசனம் அளித்த நாள் தைப்பூசம் என்பர்.
சிதம்பரத்திற்கு வந்து அரும்பெரும் திருப்பணிகள் செய்து, நடராஜரை
இரணியவர்மன் என்னும் மன்னன் நேருக்கு நேராகத் தரிசித்தது
இந்நாளிலேயே.
இக்காரணங்களுக்காகவே சிவன் கோயில்களில்
தைப்பூசத்தன்று சிறப்பு அபிஷேகங்களுடன் பூஜைகள் நடத்தப்படுகின்றன.
Dear Devotees!!
Thaipoosam will be conducted this year on Saturday February 04, 2023 at Ottawa Sivan Temple.
Thaipoosam is a festival celebrated by the Saiva community on the full moon in the Tamil month of Thai. The festival commemorates the occasion when Parvati gave Murugan a Vel.
5.30 | PM | Nava kumba poosai begins |
6.00 | PM | Special Abishekam to Lord Murugan |
7.30 | PM | Evening Special Poosai starts |
8.00 | PM | Vasantha Mandapa Poosai to murugan & Procession of Lord Murugan along with Valli and Theivanai to bless devotees. |
8.30 | PM | Distribution of Pirasatham |
Devotees are kindly requested to visit on this day to attend this Special Abisheka Pooja and get blessed by Lord Murugan.