வல்லவாம்பிகா ஶ்ரீ தையல்நாயகி சமேத வைத்தியநாத சுவாமிக்கு புதிய கோயில் அமைய எல்லாம்வல்ல எம்பெருமான், பெருமாட்டியிடம் அனுமதியும் அருளும் வேண்டி
“ருத்ர பாராயண ஹோம, அபிஷேக பூசை”
ஒட்டாவா சிவன் கோயில் எனும் வல்லவாம்பிகா ஶ்ரீ தையல்நாயகி சமேத வைத்தியநாத சுவாமி கோயிலில் எழுந்தருளி இருக்கும் எம்பெருமான், பெருமாட்டியும் அவர்தம் பரிவார மூர்த்திகளுக்கும் சைவாகம முறைக்கு அமைவாக புதியதோர் திருக்கோயில் அமைய திருவருள் கூடியுள்ளது.
அப் புதிய கோயில் அமைக்கும் அரிய சிவகைங்கரியம் சிறப்புற நடைபெற கோயில் அறங்காவலர் சபை, இயக்குனர் சபை மற்றும் கோயில் நிர்மாண சபையினர் எம்பெருமான், பெருமாட்டிக்கு “ருத்ர பாராயண ஹோம அபிஷேக பூசையும்” பரிவார மூர்த்திகளுக்கு “விஷேச பூசையும்” செய்து எம்பெருமான் பெருமாட்டியிடம் அனுமதியும், பேரருளையும் பெறுவதோடு அன்று தாமும் இச் சிவகைங்கரியத்தை சிறப்புற செய்து முடிப்போம் எனும் சங்கல்பத்தையும் அதாவது உறுதியையும் எடுக்கவுள்ளனர்.
இவ் “ருத்ர பாராயண
ஹோமமும், அபிஷேக பூசையும்” வரும் ஆனித் திங்கள் 13ம் நாள், 27 ஜூன் 2015
சனிக்கிழமை மாலை நடைபெற திருவருள் கூடியுள்ளது.
நிகழ்ச்சி நிரல்
ஹோமாரம்பம் : 12.00 மணி
அபிஷேகம் : மாலை 3.00மணி
பூசை : மாலை 4:00 மணி
இவ்வரிய சிவகைங்கரியத்திற்க்கு ஒட்டாவா சிவன் அடியார்கள் அனைவரும் வருகைதந்து இறையருளை பெற்றுய்யும் வண்ணம் வேண்டுகிறோம்.