ஆவணி சதுர்த்தி என்பது ஆவணி மாதத்துச் சுக்கில பட்சத்தில் வரும் சதுர்த்தியில் (வளர்பிறை நான்காம் நாள்) அநுட்டிக்கப்படும் விநாயக சதுர்த்தி விரதமாகும்.
ஆவணி சதுர்த்தி
06-09-2024 வெள்ளிக்கிழமை
நிகழ்ச்சி நிரல்
காலை 10:00 மணி | 108 சங்காபிஷேக பூசாரம்பம், : சந்தனக் காப்பு |
மதியம் 12:00 மணி | விசேஷ பூசை |
மாலை 7:30 மணி | விசேஷ பூசாரம்பம், : சஹஸ்ர நாம அர்ச்சனை |
மாலை 8:30 மணி | விநாயகர் வீதிப்புறப்பாடு |
நிகழும் வருடம் ஆவணி திங்கள் 21ஆம் நாள் வெள்ளிக்கிழமை ஒட்டவா சிவன் கோயிலில் “விநாயக சதுர்த்தி” சிறப்புற நடைபெற இறையருள் கூடியுள்ளது. அன்று எம்பெருமான் கற்பகவிநாயகருக்கு மதியம் விஷேச 108 சங்காபிஷேகமும் பூசையும், மாலை விஷேச பூசையும் நடைப்பெற்று எம்பெருமான் விநாயகப்பெருமான் வீதிவலம் வந்து அடியார்களுக்கு அருள்வளங்குவார். இவ்வரிய நன்னாளில் ஆலயத்துக்கு வருகை தந்து விநாயகப்பெருமானை வணங்கி இஷ்டசித்திகளை பெறுவீர்.
Vinayakar Sathurthi
Friday September 06, 2024
Religious Program
10:00 AM | 108 Sangaabishekam |
12:00 Noon | Special Pooja |
7:30 PM | Special Pooja |
8:30 PM | Lord Vinayakar’s procession starts |
ஒவ்வோர் ஆண்டும் ஆவணி மாதம் சுக்கிலபட்ச சதுர்த்தித் திதியன்று விநாயக சதுர்த்தி கடைபிடிக்கப்படுகின்றது. அன்றைய தினம் பயபக்தியோடு விநாயகரை வழிபட்டு , உண்ணா நோன்பிருந்து, தான தர்மங்கள் செய்து கொண்டாடுகின்றனர்.
சுழி :
எழுதத் தொடங்கும் முன் பிள்ளையாரை ஞாபகப்படுத்தும் சுழியும் – O (ஆதியும் அந்தமும் அவரே), தும்பிக்கையை நினைக்கவைக்கும் கோடும் – இணைந்து “உ” எனும் பிள்ளையார் சுழி உருவானது. பிள்ளையார் சுழி போட்டுத் தொடங்கும் அனைத்து செயல்களையும் பிள்ளையார் அருளால் பிசிறின்றி முடிந்துவிடும் என்பது ஆன்றோர் வாக்கு.
விநாயகர் வணக்கம் :
கரங்களை முட்டியாகப் பிடித்து மூன்று முறை தலையிலே குட்டிக்கொள்ள வேண்டும். இவ்வாறு தலையில் குட்டிக்கொள்ளும் பொழுது, யோக சாஸ்திரங்களின்படி, நம் தலையின் இரு பக்கமிருக்கும் அமிர்தமானது சுண்டிவிடப்பட்டு, சுரந்து சுழுமுனாநாடி (தண்டுவடம்) வழியாக மூலாதாரத்தில் ஒளிரூபமாகவிருக்கும் விநாயகரைச் சென்றடைந்து அபிஷேகமாகின்ற பொழுது அவரின் அருள் கிடைக்குமென்ற வெளிப்பாடாகவே செய்யப்படுகின்றது.
திருவிழாவின் சிறப்பம்சங்கள்
விநாயகர் சதுர்த்தி என்பது விநாயகர் பெருமானை வழிபடும் ஒரு சிறந்த இந்து விழாவாகும். இந்த விழாவில் மக்கள் விநாயகர் சிலைகளை வீட்டிற்கு கொண்டு வந்து பூஜை செய்து சில நாட்கள் வீட்டில் வைத்து பின்னர் நீர்நிலைகளில் கரைத்து விடுவார்கள். இந்த வழிபாடு பூமியில் இருந்து வந்தது மீண்டும் பூமிக்கு திரும்பும் சுழற்சியை குறிக்கிறது. இது இயற்கையின் நியமத்தையும் புதிய தொடக்கங்களுக்கான வாய்ப்பையும் நமக்கு உணர்த்துகிறது.
திருவிழா கொண்டாட்டங்கள்
விநாயகர் சதுர்த்தி விழாவில் மக்கள் விநாயகர் சிலைகளை அலங்கரித்து பல்வேறு பூஜைகள் செய்வார்கள். வீடுகளிலும் கோவில்களிலும் விநாயகருக்கு பல விதமான படையல்கள் செய்து அர்ப்பணிக்கப்படுகின்றன. கொழுக்கட்டை உளுந்து வடை போன்றவை விநாயகரின் பிடித்த உணவுகளாக கருதப்படுகின்றன. மேலும் இசை மற்றும் நாட்டிய நிகழ்ச்சிகள் மூலம் கலையின் வடிவங்கள் மூலமாகவும் இந்த திருவிழா கொண்டாடப்படுகிறது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இந்த திருவிழாவில் பங்குபெற்று மகிழ்வர்.