விநாயகவிரதம் – 2024
21 நாட்கள் நடைபெறும் இந்த விரதம் : 15/12 ~ 04/01, 2025
விநாயகவிரதம் ஆரம்பம் – ஞாயிற்றுக்கிழமை 15-12-2024
மாலை | 6.00 மணி | உபயகாரர் சங்கல்பம் |
பிள்ளையாருக்கு பால் அபிஷேகம் | ||
அலங்காரம் | ||
மாலை | 6.30 மணி | பிள்ளையார் கதை படித்தல் |
மாலை | 7.45 மணி | விசேட மாலைப் பூசை ஆரம்பம் |
விநாயகசஷ்டி விரதம் பூர்த்தி – சனிக்கிழமை 04-01-2025
மாலை | 5.30 மணி | உபயகாரர் சங்கல்பம் |
நவகலச ஹோம பூசை | ||
விநாயகர் விசேட அபிஷேகம் | ||
மாலை | 6.30 மணி | பிள்ளையார் கதை படித்தல் |
மாலை | 7.45 மணி | விசேட மாலைப் பூசை ஆரம்பம் |
வசந்த மண்டப பூசை | ||
இரவு | 8.30 மணி | விநாயகர் உள்வீதி வலம்வந்து பக்தர்களுக்கு அருள்தருவார் |
Vinayagar Viratha / Kathai
2024
December 15, 2024 to January 04, 2025
6.00 PM | Sankalpam |
Milk Abishekam | |
6.30 PM | Pillaiyar story ready |
7.45 PM | Pooja begins |
விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான்
விநாயகனே வேட்கை தணிவிப்பான்-விநாயகனே
விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம் தன்மையினால்
கண்ணில் பணிமின் கனிந்து.
விநாயகர் விரதங்கள் பல. அவற்றுள் கார்த்திகை மாசம் தேய்பிறை பிரதமை முதல் மார்கழி மாசத்துப் பூர்வ பக்கச் சஷ்டி வரையும் உள்ள இருபத்தொரு நாட்கள் அனுஷ்டிக்கும் விரதமும் ஒன்றாகும். இது விநாயக சஷ்டி என்றும் மார்கழி சஷ்டி, குமார சஷ்டி, பெருங்கதை விரதம் என்றும் கூறப்பெறுகிறது. கார்த்திகைத் திங்கள் கிருஷ்ண பட்சப் பிரதமை முதலாக மார்கழித் திங்கள் (வளர்பிறை) சஷ்டி இறுதியாகவுள்ள இருபத்தொரு நாளும் இந்த விரதம் கடைப் பிடிக்கப்பெறுகிறது.
விரதம்:
மனம் பொறிவழி போகாது நிற்றற் பொருட்டு, உணவை விடுத்தேனும் சுருக்கியேனும் மனம், வாக்கு, காயம் என்னும் மூன்றினாலும் கடவுளை மெய்யன்போடு வழிபடுதல் விரதமாகும்.
இந்துக்கள் ஆன்ம ஈடேற்றங் கருதி செய்யுஞ் சமய அனுட்டானங்களில் விரதமும் ஒன்று. விரதம் என்பது ஒரு வகை விஷேட வழிபாடு ஆகும். விரதம் என்னும் சொல் உண்ணும் உணவை சுருக்குதல் அல்லது விடுத்தல் என பொருள்படும்.
விரதத்தைக் கடைப்பிடிப்பவர்கள் ஐம்புலன்களையும் அடக்கி, திரிகரண சுத்தியுடன் இருத்தல் வேண்டும். அப்போதுதான் மன அடக்கத்தை மேம்படுத்த முடியும். பெரியோர் கூறும் புண்ணியம் ஏழினுள் இதுவும் ஒன்று.
விரதம் அனுஷ்டிப்பதனால் மனம் புத்தி முதலிய உட்கருவிகள் தூய்மை அடையும். இதனால் ஞானம், நல்லறிவு கைகூடும்.