Tuesday 07 May 2024 Date:23/04/2024 - 23/04/2024 09:00-21:30 சித்திராபெளர்ணமி / Chitra pournami சித்ரா பெளர்ணமி சித்திரை மாதம், சித்திரை நட்சத்திரம், பௌர்ணமி கூடிய நாளே சித்ரா பௌர்ணமி. பௌர்ணமி தினங்களிலேயே, இந்த சித்ரா பௌர்ணமிக்குத்தான் சிறப்பு அதிகம்.தாயார் உயிருடன் இல்லாதவர்கள் கோயிலுக்கு வந்து மோட்ச அர்ச்சனை செய்ய ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. உங்கள் குடும்பத்தில் வாழ்ந்து இறந்த பெண்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்தனை செய்வதற்குச் சித்திரா பெளர்ணமி சிறந்த நாளாகும். இறைவன் புரிந்த அறுபத்துநான்கு திருவிளையாடல்களில் முதல் திருவிளையாடல், ‘இந்திரன் பழி தீர்த்த படலம்’. இந்தத் திருவிளையாடல் நடந்தது ஒரு சித்ராபௌர்ணமி நாளில்தான். திருப்பூர், மங்களம் சாலையில் சின்ன ஆண்டிபாளையம் கிராமத்தில் ஸ்ரீ சித்திர குப்தர் கோவில் உள்ளது. தமிழ் நாட்டில் சித்திரகுப்தருக்கு தனிக்கோவில் ஒரு சில இடங்களிளேயே அமைந்துள்ளதில் இதுவும் ஒன்று இங்கு சித்திரா பெளர்ணமி அன்று சித்திரகுப்த மகாயாகம் மிகச்சிறப்பாக நடைபெறுகிறது. |