Saturday 27 April 2024
Date:26/05/2024 - 26/05/2024 09:00-21:00
சங்கடஹர சதுர்த்தி /Sankadahara chathurthi

சங்கடஹர சதுர்த்தி    -  2024

28-01, 27-02, 28-03, 27-04, 26-05, 24-06,
24-07, 22-08, 20-09, 20-10, 18-11, 18-12

இந்த சங்கடஹர சதுர்த்தி பூஜையில் பங்கு கொள்ள விரும்பும் அடியார்கள் வருடம் $150 தந்து தங்களது குடும்பத்தினரும் பெயர் நட்சத்திரங்களை ஆலய பணிமனையில் பதிவு செய்ய வேண்டுகிறோம்.

சங்கடம் என்றால் துன்பம். ஹர: என்றால் அறுத்தல் அதாவது விடுதலை செய்தல். சங்கட ஹர சதுர்த்தியன்று விநாயகரை விரதம் இருந்து வழிபட்டால் துன்பங்களில் இருந்து விடுதலை அடையலாம்.
வணங்குவதற்கு எளியராகவும், வாழ்வில் எல்லா வளங்களையும்
தருபவராகவும் இருப்பவர் விநாயகப்பெருமான். அவரை எண்ணி வணங்கும் எல்லா நேரமும் விசேஷமானவைதான். எனினும் சதுர்த்தி நாளில் மேற்கொள்ளப்படும் சங்கடஹர சதுர்த்தி விரதம் கணபதிக்கு என்றே உருவான அருமையான விரதம். இதை மேற்கொண்டு கணபதியை பூஜிக்கும் பக்தர்களுக்கு எந்தக் குறையும் இருப்பதில்லை என்றே சொல்லப்படுகிறது.

Back to event list