Wednesday 03 April 2024
Date:03/03/2024 - 02/02/2024 09:00-21:00
Repeat Every Month(s) on the 3
பைரவர் அட்டமி விசேட பூசை

Bairava Ashtami
தேய்பிறை பைரவர் அஷ்டமி விசேட பூசை

3-01, 2-02, 3-03, 1, 30-04,30-05, 28-06,
27-07, 26 -08, 24-09, 24-10, 22-11, 22-12

மாலை 7.00 மணி விசேட   அபிஷேகம்
மாலை 8.00 மணி வசந்த மண்டப பூசை
இரவு .8.30 மணி  வீபூதிபிரசாதம் வழங்குதல்

ஸ்ரீ காலபைரவருக்கு சிறப்பான தேய்பிறை அஷ்டமி:
ஒவ்வொரு பெளர்ணமிக்கு பின் வரும் அஷ்டமி தேய்பிறை அஷ்டமி ஆகும். அந்த நாள் ஸ்ரீ காலபைரவருக்கு மிகவும் உகந்த நாள் ஆகும். அப்போது நம் குறை தீர வேண்டிக் கொண்டு ஸ்ரீ காலபைரவருக்கு விரதம் மற்றும் வழிபாடு நடத்தினால் மிக சிறப்பான பலன்களை வாரி வழங்குவார்.
ஒருவரின் உண்மையான கோரிக்கைகளை நம்பிக்கையுடன் பைரவரிடம் வேண்டும்போது 30 தினங்களுக்குள் நிறைவேறுகிறது.

இந்த மனிதப் பிறவி என்பது பூர்வ ஜென்ம புண்ணியத்தால் கிடைக்கப் பெற்ற வரப் பிரசாதம். இப்பிறவியின் உன்னதமான நிலைகளை அறிந்து, எவன் ஒருவன் பைரவரின் துணை கொண்டு கர்மவினையெனும் காலத்தை எதிர்கொள்கிறானோ அவனே ஞானத்தைப் பெற்று பிறவிப் பிணியை வென்றவனாகி விடுகிறான் . ஸ்ரீகால பைரவர், அசிதாங்க பைரவர், குருபைரவர், குரோதபைரவர், உன்மத்த பைரவர், கபால பைரவர், பீஷண பைரவர், சண்ட பைரவர், சம்ஹார பைரவர், ஊர்த்துவ வடுக பைரவர், ஸ்வம்புநாத பைரவர், க்ஷேத்ர பால பைரவர், சட்டநாத பைரவர் மற்றும் ஸ்ரீஸ்வர்ணாகர்ஷண பைரவர் – இப்படி அறுபத்து ரூபங்களை உடைய பைரவர்களில் மேலே சொன்ன பதினா ன்கு பைரவ மூர்த்திகளைத்தான் காலப்போக்கில் குறிப்பாக வழிபடுகிறார்கள்.

அருள்மிகு ஸ்ரீ தையல்நாயகி சமேத வைத்தியநாத சுவாமியின் கருணையினாலே பைரவருக்கு மாதந்தோறும் தேய் பிறை அட்டமி யன்று பக்தர்களின் திருஷ்டி தோஷங்கள் விலக பைரவருக்கு விசேட அபிஷேக பூசை மாலை 7.00 மணி தொடங்கி நடைபெறும்.

இவ் விசேட பூசையில் பங்கு கொள்ள விரும்பும் அடியார்கள் ஆலய காரியாலயத்தில் தம்து பெயர் விபரங்கள் பதிவு செய்து கட்டணம் செலுத்துமாறு வேண்டுகிறோம்.

ஓம் நமச்சிவாய!

BAIRAVA ASHTAMI SPECIAL POOJA

By the grace of Vallavambika Sri Taiyalnayaki Sametha Vaithiyanatha Swami, Bairava Ashtami Special Pooja will be held on ‘Thei Pirai Ashtami’ day on every month to protect you and your family from Thirushti and other negative powers.

Those who like to join in this monthly Special Pooja to be conducted on “Thei Pirai Ashtami” day from 7.00 PM, kindly register your name, Telephone no etc. and pay charges at the Temple Office.

Aum Namashivaaya!

 

 

Back to event list