Tuesday 07 May 2024
Date:23/04/2024 - 23/04/2024 09:00-21:30
சித்திராபெளர்ணமி / Chitra pournami

சித்ரா பெளர்ணமி
செவ்வாய்க்கிழமை 23 - 04 - 2024

சித்திரை மாதம், சித்திரை நட்சத்திரம், பௌர்ணமி கூடிய நாளே சித்ரா பௌர்ணமி.

பௌர்ணமி தினங்களிலேயே, இந்த சித்ரா பௌர்ணமிக்குத்தான் சிறப்பு அதிகம்.தாயார் உயிருடன் இல்லாதவர்கள் கோயிலுக்கு வந்து மோட்ச அர்ச்சனை செய்ய ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. உங்கள் குடும்பத்தில் வாழ்ந்து இறந்த பெண்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்தனை செய்வதற்குச் சித்திரா பெளர்ணமி சிறந்த நாளாகும்.

 இறைவன் புரிந்த அறுபத்துநான்கு திருவிளையாடல்களில் முதல் திருவிளையாடல், ‘இந்திரன் பழி தீர்த்த படலம்’. இந்தத் திருவிளையாடல் நடந்தது ஒரு சித்ராபௌர்ணமி நாளில்தான்.
மக்களின் பாவ புண்ணியங்களைக் கணக்கெடுக்க பரமசிவனால் பொற்பலகையில் ஓவியமாக வரையப்பட்டு பெரியநாயகி அம்பாளின் அருட்பார்-வையால் உயிர் பெற்றவர் சித்ரகுப்தர். ஓவியத்தில் இருந்து பிறந்ததால் இவருக்கு சித்திரபுத்ரன், சித்ரகுப்தன் என்ற திருநாமங்கள் ஏற்பட்டன.
சித்ரகுப்தன் என்பதற்கு இன்னொரு வகையான அர்த்தமும் சொல்வதுண்டு. ‘சித்திரம்’ என்ற சொல்லுக்கு வியப்பூட்டுவது என்று பொருள். ‘குப்தம்’ என்பது மந்தணம் என்று பொருள்படும். இவர் ஆச்சரியப்படத்தக்க முறையில் கணக்குகளை எழுதி ரகசியமாகக் காப்பாற்றுவதால், ‘சித்ரகுப்தன்’ எனப்படுகிறார். உயிர்களைப் பறிக்கும் எமதர்மராஜனிடம் தலைமைக் கணக்கராக இருப்பவர். அவரைக் கொண்டாடி விழா எடுக்கும் நாளே சித்ரா பௌர்ணமி என்றும் கூறுவர்.
நவக்கிரகங்களில் ஒன்றான கேதுவுக்குரிய பிரத்யேக தேவதையாக சித்ரகுப்தனைக் கூறுவர். சித்ரா பௌர்ணமி நாளன்று செய்யும் சித்ரகுப்த பூஜை, சித்ரகுப்தரின் அருளைப் பெற்றுத் தரக்கூடியதாகும். அந்த நாளில் சித்ரகுப்தரை அர்ச்சித்து பூஜை செய்தால், கேது கிரகத்தால் விளையும் தீமைகள் ஒடுங்கும்.

திருப்பூர், மங்களம் சாலையில் சின்ன ஆண்டிபாளையம் கிராமத்தில் ஸ்ரீ சித்திர குப்தர் கோவில் உள்ளது. தமிழ் நாட்டில் சித்திரகுப்தருக்கு தனிக்கோவில் ஒரு சில இடங்களிளேயே அமைந்துள்ளதில் இதுவும் ஒன்று இங்கு சித்திரா பெளர்ணமி அன்று சித்திரகுப்த மகாயாகம் மிகச்சிறப்பாக நடைபெறுகிறது.


Back to event list