Friday 03 May 2024
Date:03/05/2024 - 03/05/2024 09:00-21:00
திருநாவுக்கரசு சுவாமிகள் குருபூசை

திருநாவுக்கரசு சுவாமிகள் குருபூசை
வெள்ளிக்கிழமை 03 - 05 - 2024

சித்திரை மாதம் சதயம் நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது

மெய்யடியார்களே!

எம்பெருமான் பெருமாட்டி திருவருளால் ஒட்டாவா சிவன் கோயில் நாயன்மார்களின் குருபூசையைத் தொடர்ந்து நடாத்தவுள்ளார்கள் .

நாயன்மார்களில் சைவசித்தாந்தம் அதில் தமிழ், சைவம், என்பனவற்றை தன் கடவுட் கொள்கையில் பெரிதும் கொண்டு எமக்கு எடுத்துரைத்த மாபெரும் அருளாளர். அத்துடன் இறைவழிபாட்டில் மக்கள் சேவை எவ்வளவு முக்கியமானது என எடுத்து காட்டியர்.

கொடுங்கோலர்கள் ஆகிய சமண ஆட்சியாளர்களால் பல இன்னல்கள் பட்டு 80 வயதான அகவை இயலும் இறைவனின் பால் தன்னுடைய ஞான தவவலிமை ஆனாலும் எந்தவித சேதாரமுமின்றி தன்னுடைய இளமைக் காலத்தில் தாய் மதத்தை பற்று இல்லாமல் உத்தை சமணர்களின் மாயத்தில் கட்டுண்டு பிறகு கடுமையான வயிற்று வலி பூண்டு தமக்கையார் மூலம் தாய் மதத்தை ஏற்றுக் கொண்ட அருளாளர்.
இதனால் சமண கொடுங்கோலர்களின் மூலம் பல வருடமாக தண்டனைக்கு உள்ளாக்கப் பட்ட திருநாவுக்கரசர் பெருமானார் ஆயினும் சைவசமயத்தின் உண்மை அருள் நிலையை மிகத்தொன்மையான பக்தி நிலையையும் வெளிப்படுத்தி மீண்டு வந்த அப்பர் அடியவர் கடுமையான வெப்பம் கொண்ட சுண்ணாம்பு கால்வாயில் இவரை தள்ளி பல நாள் பட்டினி போட்டு அடைத்து வைத்திருந்தார்கள். கொடுமையான விஷ ஜந்துக்கள் நிறைந்த அறையில் பூட்டி வைத்திருந்தார்கள். இப்படி பல் வேறு கொடுமைகள் படுத்தி இறுதியாக அவரை ஒன்றும் செய்ய முடியாமல் போக பல நூறு ஆயிரம் எடைகொண்ட கற்பாறையில் அவரை சங்கிலியால் பிணைத்து நடுக்கடலில் மூழ்கி அடித்தார்கள் ஆயினும் இறைவனின் உண்மை மாண்புயர் இந்த திருநாவுக்கரசு சுவாமிகள் எவ்விதத்திலும் சேதாரம் இன்றி அவர்கள் கட்டிய அந்த கற்பாறை அவரை சுமந்து கடலின் கரையில் அவரை இறக்கி விட்டது அப்பர் அடியார் திருநாவுக்கரசரை பகைவர்கள் கடலில் தள்ளிய இடம் கோடியக்கரை அவர் கற்பாறையில் மிதந்து வந்து கரையேறிய இடம் திருப்பாதிரிபுலியூர் கடலூர் ஆகும். இச்சம்பவத்தை திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரத்தில் பதிய வைத்துள்ளார்

ஓம் நமசிவாய

Back to event list