சித்ரா பெளர்ணமி
செவ்வாய்க்கிழமை 23 – 04 – 2024

காலை 9.00 மணி காலைப் பூசை
காலை 9.30 மணி சித்ரகுப்தன் கதை வரலாறு படிப்பது
காலை11.00 மணிஸ்ரீ வைத்தியநாத சுவாமிக்கும் தையல்நாயகி அம்பாளுக்கும் விசேட அபிஷேகம்
மதியம்12.00 மணி விசேட மதிய பூசை, சித்திரைக் கஞ்சி
மாலை8.00 மணிமாலைப் பூசை  , விபூதி பிரசாதம்  வழங்கல்

Chitra Pournami
Tuesday April 23, 2024

Chitra Pournami is an Indian festival celebrated by Hindus, especially Tamils.

It is observed on the day of the full moon in the month of Chithirai or Chaitra, corresponding in the Gregorian calendar to a day in April or May. The festival is dedicated to god Chitragupta, a Hindu deity who is believed to record the good and bad deeds done by men for Yama, the Hindu god of the underworld. On this day, devotees ask Chitragupta to forgive their sins. On the festival day, many devotees bathe in rivers or other water bodies to symbolise their sins being washed away.

சித்திரைக்கஞ்சி நைவேத்தியம் (Chithra Kanji Naivetiyam)
சித்திரபுத்திர நாயனார் புராணம் ஓதுதல்
(Reading Chithra Puthiranar Puranam)
மோக்ஷ அர்ச்சனை (Moksha Archanai)
தர்ப்பணம் (Tharpanam)

சித்திரா பௌர்ணமி எனப்படுவது சித்திரை மாதத்தில் வரும் பௌர்ணமி தினத்தன்று சைவ மக்களால் அநுட்டிக்கப்படும் ஒரு விரத நாளாகும்.

இந்நாளில் சைவர்கள் விரதமிருந்து கோயில்களிலும் ஏனைய புனித இடங்களிலும் கஞ்சி காய்ச்சி சித்திர புத்திரனார் கதை படித்து எல்லோருக்கும் கஞ்சி வார்ப்பர். இதை சிவனுடைய சிறப்பு விழாவாகவும் இறந்த அன்னையரின் பிதிர்த் தினமாகவும் அனுட்டிக்க ஆரம்பித்தனர்.

தாய் உயிருடன் இல்லாத ஆண்கள் அனைவரும் காலையில் எழுந்து நீர் நிலைகளுக்குச் சென்று நீராடி இறந்த தாயாரை நினைத்து தர்ப்பணம் பண்ணுவர். பின் வீட்டிற்கு வந்து, தாயார் படத்திற்ற்கு உணவு படைத்து பின்னர் குடும்பத்துடன் உணவு உண்பர். பொதுவாக தாயார் இறந்த ஆண்டுத் திவசம் (முதலாம் ஆண்டு) முடியும் வரை இவ்விரதம் அநுட்டிக்கக் கூடாது என்பர். பெண்கள் தர்ப்பணம் பண்ணாது இவ்விரதத்தை அநுட்டிப்பர்.

சித்திரகுப்தனிடம் மலையளவு பாவத்தை கடுகளவாகவும், கடுகளவு புண்ணியத்தை மலையளவாகவும் எழுதிக்கொள்ளும்படி பிரார்த்திப்பார்கள்.