Skip to content Skip to footer
Loading Events

« All Events

  • This event has passed.

Chithrai Tamil New Year – சித்திரை வருடப் பிறப்பு  

Apr 13, 2025 @ 8:00 am - 9:00 pm

Dear Devoties!

Visvaavasu Chithirai Tamil New Year will be celebrated on Sunday, April 13, 2025, at Ottawa Sivan Temple. May Lord Vallavambika  Sri Thayalnayaki Sametha Vaithiyanaatha Swamikal bless everyone with a happy, healthy and prosperous New Year.

Temple will be kept open from 8.30 AM to 9.00 PM

9.00 AM Morning Pooja
10.00 AM Nava Kalasa special Abishekam
12.00 Noon Special Noon Pooja
4.59 PM Chithirai New Year Special pooja
7.30 PM Evening Pooja
Distribution of Pirasatham

Kaalanchi Archana:  9.00 AM to 9.00 PM

Let us all pray and worship Vallavambika Sri Thaiyalnayaki Sametha Vaithiyanatha Swamy to bless peace and happiness in our lives in this new Chithirai Tamil New Year.

Visvaavasu new year begins at 4:59 PM on Sunday, April 13 (Tamil Month Chithirai 1st).

Maruthu Neer will be available to devotees at the Temple from Saturday, April 12, 2025, after 4:00 PM onwards.

Visu Punniya Kaalam,  Sunday April 13, from 12.59 PM  to 8.59 PM

 

ஒட்டாவா சிவன் ஆலயத்தில்  சித்திரை (விசுவாவசு) வருடப் பிறப்பு   இவ்வருடம் சித்திரை மாதம் 1ம் திகதி, (13-04-2025) ஞாயிற்றுக்கிழமை  நடைபெற  இறையருள் கூடியுள்ளது.

புத்தாண்டில் எல்லோரும் சீரும் சிறப்புடன் வாழ வல்லவாம்பிகா ஸ்ரீ தையல்நாயகி சமேத வைத்தியநாதசுவாமிகள் அருள்புரிய வேண்டி வணங்கி வாழ்த்துகிறோம்!

காலை 8.30 மணியிலிருந்து இரவு  9.00 மணிவரை கோயில் பக்தர்களின் வசதிக்காக திறந்திருக்கும்.

காலை 9.00 காலைப்பூசை
காலை 10.00 நவகலச பூசை,  விசேட அபிசேகம் ஆரம்பம்
மதியம் 12.00 விசேட மதிய  பூசை
மாலை 4.59 சித்திரை புது வருட பிறப்பு விசேட பூசை
மாலை 7.30 மாலைப்பூசை
விபூதி  பிரசாதம் வழங்கல்

காலை 9.00 மணி முதல் மாலை 9.00 மணி வரை காளாஞ்சி அர்ச்சனை (மட்டுமே) நடைபெறும்

வருடப் பிறப்பு 
ஒட்டாவாவில் விசுவாவசு வருடம் 13- 04 – 2025 ஞாயிற்றுக்கிழமை மாலை  4.59 மணிக்குப் பிறக்கின்றது.

மருத்து நீர்
இப் புண்ணிய காலத்தில் யாவரும் மருத்துநீர் தேய்த்து சிரசில் ஆலிலையும் காலில் இலவமிலையும் வைத்து  குளியல் செய்து  சிவப்பு நிற (புதிய) பட்டாடை உடுத்தி மாணிக்கம் பதித்த ஆபரணம் அணிந்து, சந்தனம் பூசி, நறுமலர்சூடி தத்தம் வீடுகளிலே சூரியனுக்குப் பொங்கல் பூசை செய்து, பிள்ளையார் முதலிய குலதெய்வ வழிபாடு செய்து மங்களகரமாக வாழ்வோமாக.
மருத்து நீர் பெற விரும்புவோர் சனிக்கிழமை (12 – 04 – 2025) பிற்பகல் 4.00 மணி முதல் கோயிலில் பெற்றுக்கொள்ளலாம்.

விசு புண்ணிய காலம்
ஒட்டாவாவில்  ஞாயிற்றுக்கிழமை அன்று பிற்பகல் 12:59 மணி முதல் முன்னிரவு 8:59 மணி வரை விசுபுண்ணிய காலமாகும்.

சங்கிரமதோச நட்சத்திரங்கள்
திருவாதிரை, சித்திரை 3, 4-ம் கால்கள், சுவாதி, விசாகம் 1,2,3-ம் கால்கள், சதயம், பூரட்டாதி 4-ம் கால், உத்தரட்டாதி, ரேவதி  ஆகிய நட்சந்திரங்களில் பிறந்தவவர்களுக்குச் சங்கிரமதோசஷம் இருப்பதால் மருத்து நீர் தேய்த்து குளியல் செய்து, தான தர்ம வழிபாடு செய்வது சிறந்தது .

 

Details

Date:
Apr 13, 2025
Time:
8:00 am - 9:00 pm
Event Category:
E-mail
Password
Confirm Password