சர்வாலய தீபம்  – 14 -12- 2024
சனிக்கிழமை

மாலை5.30 மணிஉபயகாரர் சங்கல்பம்
  நவகலச ஹோம பூசை
  சிவன் / அம்மன் கலச அபிஷேகம்
  முருகனுக்கு பால் அபிஷேகம்
மாலை6.15 மணி கூட்டுப் பிராத்தனை
மாலை7.45 மணி விசேட மாலைப் பூசை ஆரம்பம்
   வசந்த மண்டப பூசை
இரவு 8.30 மணி சுவாமி உள்வீதி வலம்வந்து பக்தர்களுக்கு அருள்தருவார்
     சொக்கப்பானை ஏற்றுதல்

                                                           விபூதி பிரசாதம் வழங்குதல்

 
Saturday December 14, 2024

Karthika Deepam, Karthikai Vilakkidu is a festival of lights that is observed by Hindus.

It falls in the month of Kārttikai (mid-November to mid-December) as per Tamil calendar. This occurs on the day when the moon is in conjunction with the constellation Karthigai (Pleiades) and pournami.

கார்த்திகை விளக்கீடு என்பது கார்த்திகை மாத பௌர்ணமி நாளும் கார்த்திகை நட்சத்திரமும் சேர்ந்த திருக்கார்த்திகை நாளில் தமிழர்கள் தமது இல்லங்களிலும் கோயில்களிலும் பிரகாசமான தீபங்களை ஏற்றி மகிழ்ச்சியாகக் கொண்டாடும் ஒரு தீபத் திருநாள் ஆகும்.

கார்த்திகை விழாவை குமராலாய தீபம், சர்வாலய தீபம், விஷ்ணுவாலய தீபம் என மூன்றாக ஆலயங்களிலும் வீடுகளியும் கொண்டாடுவர்.

குமராலய தீபம்:முருகன் ஆலயங்களில் கொண்டாடப்படும். கார்த்திகை மாதத்தில் கார்த்திகை நட்சத்திரம் கூடிவரும் நாள்.

விஷ்ணுவாலய தீபம்: விஷ்ணு ஆலயங்களில் கொண்டாடப்படும். கார்த்திகை மாதத்தில் ரோகினி நட்சத்திரம் கூடிவரும் நாள்.

சர்வாலய தீபம்:ஏனைய இந்து ஆலயங்களிலும் வீடுகளிலும் கொண்டாடப்படும். கார்த்திகை மாதத்து முழுமதி திதி.

கார்த்திகை மாதத்தின் பண்டிகைகளில் முக்கியமானதாக கருதப்படுவது கார்த்திகை தீபம் என்பது எல்லோருக்கும் தெரிந்த சேதிதான். சிவன் கார்த்திகை மாத கிருத்திகை நட்சத்திரத்தில் திருமால் பிரம்மன் இருவருக்கும் அக்னி வடிவமாக காட்சி தந்தார். அதாவது தமக்குள் யார் பெரியவர் என்ற போட்டி விஷ்ணுவுக்கும் பிரம்மனுக்கும் உண்டானபோது அந்த போட்டிக்கு நடுவராக வந்து சிவன் ஒரு பெரும் சோதியாக எழுந்து நின்று சோதியின் அடியை விஷ்ணுவும், உச்சியை பிரம்மனும் காண வேண்டும்.

அப்படி யார் முதலில் பார்க்கிறீர்களோ அவர்களே பெரியவர் என்று மாயக் குரல் ஒன்று கூற அதை ஏற்றுக் கொண்ட இருவரும் தமது பயணத்தத் தொடங்கினர். அன்னப்பறவையாக உருமாறிய பிரம்மன் பறந்து உச்சியைத் தேடினார்.

பன்றியாக உருமாறிய விஷ்ணு நிலத்தைத் துளைத்துக் கொண்டு அடியைத் தேடினார். இருவரும் பல ஆண்டுகள் பயணித்தும் தங்கள் இலக்கை அடைய முடியவில்லை. கடைசியில் தமது தோல்வியை இருவரும் ஒப்புக் கொண்டனர். அப்படி சோதிப் பிழம்பாக சிவன் தோன்றிதை அனைவருக்கும் காட்ட வேண்டும் என இருவரும் கோர அதை சிவன் ஏற்றுக் கொள்கிறார். அதன்படி ஒவ்வோர் ஆண்டும் கார்த்திகை நாளில் சோதியாய் வெளிப்பட்ட நாள்தான் கார்த்திகை தீபம் நாள். அதை நினைவுப்படுத்தத்தான் அக்னி மையமான திருவண்ணாமலையில் தீபத்தை மலைமீது ஏற்றி வைக்கிறார்கள் என்பது கதை.

இத்திருநாள் முருகக்கடவுள் அவதரித்த தினமாகவும் கொண்டாடப்படுகிறது.

Lord Shiva appeared as an endless flame of light before Lord
Vishnu and Lord Brahma, who each considered himself
supreme and said that the matter could be tested if the two
could search for Lord Shiva’s Head and feet. Lord Vishnu took
the form of a boar(Sanskrit:Varaha, Tamil:Varaham(pandri) )
and delved deep into the earth, Lord Brahma that of a swan
(Sanskrit:Hansa, Tamil:Annam) and flew towards the skies.

Lord Vishnu failed in his search and returned. But Lord
Brahma, chancing upon a piece of Thazhambu, a flower,
learnt from it that it had been floating down for thirty thousand
years from Lord Shiva’s head. He seized upon this and
claimed to Lord Shiva that he had seen the other’s top.

Lord Siva realized the falsehood and pronounced that there would
never be a temple for Lord Brahma in this world. He also
interdicted the use of the flower Thazhambu in his worship.
Lord Shiva appeared as a flame, this day is called karthikai
maha Deepam