சிவனடியார்களே,


புனராவர்த்தனப் பிரதிஷ்டா மஹா கும்பாபிஷேகம்

ஒட்டாவா சிவன் கோயிலில் எழுந்தருளி பக்தர்க்கு அருள் பாலித்துக் கொண்டிருக்கும் வல்லவாம்பிகா ஸ்ரீ தையல்நாயகி சமேத வைத்தியநாத சுவாமியின் கிருபையினால் வரும் ஏப்பிரல் 1 திகதி வெள்ளிக்கிழமை அதிகாலை முதல் கிரியைகள் ஆரம்பமாகி ஏப்பிரல் 6ம் திகதி புதன்கிழமை புனராவர்த்தன பிரதிஷ்டை (கும்பாபிஷேகம்) நடைபெற திருவருள் கூடியுள்ளது.

முக்கிய கிரியா நிகழ்ச்சிகள் பின்வருமாறு:

ஏப்பிரல் 01 வெள்ளிக்கிழமை

காலை 6.30 மணி:கிரியா கர்மாரம்பம், விநாயகர் வழிபாடு, கணபதி ஹோமம் ஆகிய…
மாலை 8.00 மணி: அடியார்கள் பங்குபெறும் தீப பூஜை
மாலை 9.00 மணி: யந்திரஸ்தாபனம், பிம்பஸ்தாபனம், அஷ்டபந்தனம்

ஏப்பிரல் 02 சனிக்கிழமை

காலை 8.30 மணி: முதலாம் கால யாகபூஜை
காலை 9.30 மணி: எண்ணைய்க் காப்பு ஆரம்பம்
மாலை 5.30 மணி: இரண்டாம் கால யாகபூஜை

ஏப்பிரல் 03 ஞாயிற்றுக்கிழமை

காலை 8.30 மணி: மூன்றாம் கால யாகபூஜை
மாலை 5.30 மணி: நான்காம் கால யாகபூஜை

ஏப்பிரல் 04 திங்கள்கிழமை
காலை 8.30 மணி: ஐந்தாம் கால யாகபூஜை
காலை 10.00 மணி: எண்ணைய்க் காப்பு நிறைவு
மாலை 5.30 மணி: ஆறாம் கால யாக பூஜை

ஏப்பிரல் 05 செவ்வாய் கிழமை

காலை 8.30 மணி: ஏழாம் கால யாகபூஜை
மாலை 5.30 மணி: எட்டாம் கால யாக பூஜை

ஏப்பிரல் 06 புதன்கிழமை

காலை 10.10 – 11.03 மணி வரையுள்ள இடபலக்ன சுபமுகூர்த்த வேளையில் கற்பகவிநாயகர், வைத்தியநாத சுவாமி, தையல்நாயகி அம்பிகை, செல்வ முத்துக்குமரன் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கும் மஹா கும்பாபிஷேகம்.

  • ஏப்பிரல் 01ர் திகதி வெள்ளிக்கிழமை மாலை தீப பூஜையில் பங்கு பெறவும் ,
  • ஏப்பிரல் 02, 03, 04, 05 சனி, ஞாயிறு, திங்கள், செவ்வாய் தினங்களில் காலையும் மாலையும் நடக்கும் யாக பூஜைகளை உபயம் செய்யவும்,
  • ஏப்பிரல் 01 ந்திகதியிலிருந்து ஏப்பிரல் 6ந் திகதி வரை மதியமும், மாலையும் அன்னதானம் உபயம் செய்யவும்

அடியார்களை ஆலயப் பணிமனையைத் தொடர்பு கொண்டு பதிவு செய்யும்படி வேண்டுகிறோம்.

அடியார்கள் இவ்வரிய சந்தர்ப்பத்தை நழுவ விடாது ஆலயத்துக்கு வந்து எம்பெருமானை வணங்கி அருள்பெற்று ஏகுமாறு வேண்டுகிறோம்.

ஓம் நமசிவாய!