திருநாவுக்கரசு நாயனார் குருபூஜை
2024

வெள்ளிக்கிழமை 03 – 05 – 2024

சித்திரை மாதம் சதயம் நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது

திருநாவுக்கரசு நாயனார் குருபூஜை
வெள்ளிக்கிழமை 03 – 05 – 2024
  


திருநாவுக்கரசரின் குருபூசையானது, சித்திரை மாதம் சதயம் நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது

அப்பர் திருநாவுக்கரசு நாயனார் கி.பி. ஏழாம் நூற்றாண்டு தொடக்கத்தில், தமிழ் நாட்டில் பக்தி இயக்கத்தை வளர்த்த சிவனடியார்களுள் ஒருவரும், சைவ சமயத்தவர்களால் பெரிதும் மதிக்கப்படும் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரும் ஆவார். இவரைத் தேவார மூவருள் இரண்டாமவர் என்றும், இறைவனிடம் பக்தி செலுத்துதலில், தொண்டை அடிப்படையாகக் கொண்டவர் என்றும் புகழ்கின்றனர்.
இவர் தமிழகத்தில் முதன்முதலாகச் சிவன் கோயில்களில் உழவாரப் பணியை அறிமுகப்படுத்தியவர் ஆவார்.
திருநாவுக்கரசர், 49,000 தேவாரப் பதிகங்களைப் பாடியுள்ளார். இவற்றில் சில பதிகங்கள், தாள அமைப்பினைச் சேர்ந்ததாகக் குறிப்பிடுகின்றனர். இவ்வாறு தாள அமைப்புடன் பாடப்பட்டவற்றைப் பண்ணாங்கப் பாடல்கள் என்றும், தாள அமைப்பு இல்லாத பாடல்கள் சுத்தாங்கப் பாடல்கள் என்றும் அழைக்கப்படுகின்றன. திருத்தாண்டகம், திருவிருத்தம், திருக்குறுந்தொகை ஆகியவை அப்பர் பாடிய சுத்தாங்கப் பதிகங்கள்.
அற்புதங்கள், மகிமைகள், தொண்டுகள் என செல்லும் வழியெங்கும் சிவ பெருமையை நிலைநாட்டிய வாகீசர்!
திருவாமூரில் புகழனார்-மாதினியார் தம்பதியருக்கு மகனாய்ப் பிறந்தவர். இயர் பெயர், மருள்நீக்கியார். இந்த மருள்நீக்கியார், தன் வாழ்வில் தருமசேனர், நாவுக்கரசர், அப்பர், உழவாரத் தொண்டர், தாண்டக வேந்தர் எனப் பெயர்கள் பெற்றவர்.
நாவுக்கரசரின் தமக்கையார், திலகவதியார். மருள்நீக்கியார், சமணத்தைத் தழுவத் தொடங்கினார். சமண சமய நூல்களைக் கற்று, பலரையும் வாதில் வென்றதால், சமணர்கள் நாவுக்கரசருக்கு தருமசேனர் எனப் பெயர் சூட்டினர். இதுகுறித்து வருந்திய திலகவதியார் இறைவனிடத்தில் வேண்டினார். வீரட்டானேஸ்வரர் திலகவதியாரின் கனவில் தோன்றி ‘வருந்த வேண்டாம். அவரை ஆட்கொள்வோம்’ என அருளினார். அப்போது, தருமசேனருக்கு சூளை நோய் உண்டானது. சமணர்கள் எவ்வளவோ முயன்றும் நோயைக் குணப்படுத்த முடியவில்லை. நாவுக்கரசர் திலகவதியாரைத் தேடிவந்தார்.
திருநீறே நோய் தீர்க்கும் அருமருந்து என்று தமக்கை கூற, திருநீற்றைப் பெற்று மேனியில் தரித்துக்கொண்டார் தருமசேனர். அடுத்த நொடி அவர் நோய் நீங்கியது. உடனே, வீரட்டானேஸ்வரர் சந்நிதியில் அருள்பெற்று ‘கூற்றாயினவாறு விலக்ககலீர்’ பதிகம் பாடினார். உடனே, அந்தப் பதிகத்தால் மகிழ்ந்த ஈசன், அசரீரியாய் ‘இனி நாவுக்கரசர் என அழைக்கப்பெறுவாய்’ என்று புதிய நாமகரணம் செய்வித்தார்

ஓம் நமசிவாய
Subscribe Temple Event Calendar
2104 Roger Stevens Dr., North Gower, Ontario K0A 2T0, 613 489 1774
opening hours: 9:00AM to 1.30 PM & 5.30 PM to 9.00 PM