Dear Devotees /  அன்புடையீர் !!

கேதார கௌரி விரதம்
2024

12 /10 ~ 31/10

                    ஆரம்பம் :12-10-2024 – சனிக்கிழமை
                    நிறைவு: – 31-10-2024 – வியாழக்கிழமை
கௌரி காப்புக் கட்டுதல்

Kethara Gowry Viratham 2024.

  • Begins on Saturday , October 12, 2024
  • Ends on Thursday, October 31, 2024

சைவர்கள் அனுட்டிக்கும் விரதங்களுள் கேதார கெளரி விரதம் மிக முக்கியமானதாகும்.
ஒட்டாவா சிவன் ஆலயத்தில் கேதாரகெளரி விரதம்  நடைபெற  இறையருள் கூடியுள்ளது.

On the last day of Fasting  Lord Sivan & Paarvathy will come on procession following Special Komabisheka Pooja.
On completion of Vasantha Mandapa Pooja, “Kaappu” tying ceremony will be conducted to devotees followed by distribution of “Prasatham”.

முதலாம் நாள் நிகழ்வு 12-10-2024 :

மாலை5.30 மணி உபயகாரர் சங்கல்பம்
நவகலச ஹோம பூசை
அம்பாள் அபிஷேகம்
மாலை6.30 மணிகூட்டுப்பிரார்த்தனை
மாலை7.45 மணிவிசேட மாலைப் பூசை ஆரம்பம்
விபூதி பிரசாதம் வழங்குதல்

13-10-2024  தொடங்கி  30-10-2024  வரை

மாலை6.30 மணிஉபயகாரர் சங்கல்பம்
அம்பாளுக்கு பால் அபிஷேகம்
கூட்டுப்பிரார்த்தனை
கௌரி காப்பு கதை படித்தல்
மாலை 8.00 மணி விசேட மாலைப் பூசை ஆரம்பம்
 கௌரி காப்பு  பாடல்
விபூதி பிரசாதம் வழங்குதல்

கௌரி காப்புக் கட்டுதல் – 31-10-2024 

மாலை6.30 மணிஉபயகாரர் சங்கல்பம்
அம்பாளுக்கு பால் அபிஷேகம்
கூட்டுப்பிரார்த்தனை
கௌரி காப்பு கதை படித்தல்
இரவு8.00 மணிவிசேட மாலைப் பூசை ஆரம்பம்
கௌரி காப்பு பாடல்
இரவு8.30 மணிசிவபெருமான் அம்பாளுடன் வீதிவலம் வந்து அருளுவார்
விபூதி பிரசாதம் வழங்குதல்

ஓம் நமசிவாய

விரத பூர்த்தி நாளான வியாழக்கிழமை 31-10-2024 எம்பெருமானுக்கு விஷேச கோமாபிஷேக பூசையும் அதனைத்தொடர்ந்து எம்பெருமான் எம்பெருமாட்டி சமேதராய் வீதியுலாவந்து அடியார்க்களுக்கு அருள்வளங்கும் சிறப்பு நிகழ்ச்சியும், அதனைத் தொடர்ந்து விரதம் பூண்ட அடியார்களுக்கு காப்பு வழங்கலும் வெகுசிறப்பாக நடைபெற எம்பெருமான் அருள் கூடியுள்ளது.

முன்னொருகாலத்தில் கைலைமலையிலே தேவாதி தேவர்கள், முனிவர்கள் சித்தர்கள், கந்தர்வர்கள் புடைசூழ சிவன்பார்வதி தேவியோடு வீற்றிருக்கின்றார். பிருங்கிகிருடி முனிவரின் விகடான நடனத்தைக் கண்டு களித்த சிவனும் ஏனையோரும் முனிவரைப் பாராட்டினார்கள். இதனால் மகிழ்வுற்ற பிருங்கி முனிவர் அம்பிகையைத் தவிர்த்து சிவனை மட்டும் வலம்வந்து நமஸ்கரித்து நின்றார். இதனால் கோபம் கொண்ட அம்பிகை கைலாயமலையை விட்டுத் தவம் செய்வதற்காக கௌதம முனிவரின் ஆச்சிரமத்திற்கு புறப்பட்டார். அம்பிகை வரவினால் ஆச்சிரமும் சூழலும் புதுப்பொலிவுடன் விழங்கியது. ஓமத்துக்குத் தேவையான பொருட்களைச் சேகரித்துக் கொண்டு வீடுதிரும்பிய மாபெரும் தவஸ்தியான கௌதம முனிவர் தமது ஆச்சிரமம் பொலிவுற்றதன் காரணம் அம்பிகையின் வரவே என அறிந்து அவளை அர்ச்சித்து பூஜை செய்து செய்துவிட்டு அம்பிகையிடம் “இங்கு தாங்கள் வந்தமைக்குக் காரணம்” என்ன என்று கேட்டார். அதற்கு அம்பிகை முனிவரை நோக்கி “தபஸ்வியான சிவபெருமானின் பாதியுடம்பை நான் பெறவேண்டும் என்றாள்”. முனிவரும் புராணங்கள், சாஸ்திரங்கள் யாவற்றையும் அலசி ஆராய்ந்து கேதாரேஸ்வர விரத்தை அனுஷ்டிக்கும் முறையை விளக்கமாக அம்பிகைகுக் கூறியருளினார். முனிவரின் கூற்றுப்படி அம்பிகையும் 21 நாளும் சிவனைப் பூஜித்து சிவனின் பாதி உடலைப் பெற்று அர்த்தநாரீஸ்வரன் என்று எல்லாரும்போற்றும் படி சிவனின் இடப்பாகத்தில் அமர்ந்து எமக்கு அருள் புரிகின்றாள். இந்நாளில் அம்பிக்கை சிவனை நோக்கி “எம்பெருமானே இவ்விரத்தை உலகில் யார் செய்தாலும் விரும்பிய யாவற்றையும் பெறுவதற்கு அருள் புரியவேண்டும்” என்று கேட்டுக்கொண்டார். சிவனின் அம்பிகையின் வேண்டுக்கோளை ஏற்று எற்று "அங்கனமே ஆகுக" என்று அருள் புரிந்தார்.