Dear Devotees!!

Thei pirai Asatami  2024
தேய்பிறை பைரவ அட்டமி விசேட பூசை –  2024

Monday April 01 /  திங்கட்கிழமை – 01 – 04-2024

பைரவ அட்டமி
 
   
மாலை 7.00 மணிவிசேட   அபிஷேகம்
மாலை8.00 மணிவசந்த மண்டப பூசை
இரவு.8.30 மணி வீபூதிபிரசாதம் வழங்குதல்

இந்த விசேட அபிசேகம்   மாதாமாதம்  தேய்பிறை அட்டமியில் ஒவ்வொரு மாதமும் நடைபெறும் என்பதை அறியத்தருகின்றோம்.

By the grace of Vallavambika SriThaiyalnayaki sametha Vaithiyanatha Swami, Bairava Ashtami special pooja will be held on “Thei Pirai Ashtami” day on every month to protect you and your family from “Thirushti” and other negative powers.

   
PM7.00Special Abishekam to Bairavar
PM8.00Special poosai
PM8.30Distribution of Pirasatham
   

Devotees who like to join in this monthly special pooja are kindly register your name, telephone number etc and pay charges at the temple office.

Devotees are kindly requested to visit on this day to attend this Special Abisheka Pooja and get blessed by Lord Bairava.

 

ஸ்ரீ காலபைரவருக்கு சிறப்பான தேய்பிறை அஷ்டமி:
ஒவ்வொரு பெளர்ணமிக்கு பின் வரும் அஷ்டமி தேய்பிறை அஷ்டமி ஆகும். அந்த நாள் ஸ்ரீ காலபைரவருக்கு மிகவும் உகந்த நாள் ஆகும். அப்போது நம் குறை தீர வேண்டிக் கொண்டு ஸ்ரீ காலபைரவருக்கு விரதம் மற்றும் வழிபாடு நடத்தினால் மிக சிறப்பான பலன்களை வாரி வழங்குவார்.
ஒருவரின் உண்மையான கோரிக்கைகளை நம்பிக்கையுடன் பைரவரிடம் வேண்டும்போது 30 தினங்களுக்குள் நிறைவேறுகிறது.
இந்த மனிதப் பிறவி என்பது பூர்வ ஜென்ம புண்ணியத்தால் கிடைக்கப் பெற்ற வரப் பிரசாதம்.
இப்பிறவியின் உன்னதமான நிலைகளை அறிந்து, எவன் ஒருவன் பைரவரின் துணை கொண்டு கர்மவினையெனும் காலத்தை எதிர்கொள்கிறானோ அவனே ஞானத்தைப் பெற்று பிறவிப் பிணியை வென்றவனாகி விடுகிறான் .
ஸ்ரீகால பைரவர், அசிதாங்க பைரவர், குருபைரவர், குரோதபைரவர், உன்மத்த பைரவர், கபால பைரவர், பீஷண பைரவர், சண்ட பைரவர், சம்ஹார பைரவர், ஊர்த்துவ வடுக பைரவர், ஸ்வம்புநாத பைரவர், க்ஷேத்ர பால பைரவர், சட்டநாத பைரவர் மற்றும் ஸ்ரீஸ்வர்ணாகர்ஷண பைரவர் – இப்படி அறுபத்து ரூபங்களை உடைய பைரவர்களில் மேலே சொன்ன பதினா ன்கு பைரவ மூர்த்திகளைத்தான் காலப்போக்கில் குறிப்பாக வழிபடுகிறார்கள்.

– — — —||