ஸ்ரீ ருத்ர ஹோமம் 

ஞாயிற்றுக்கிழமை 25-08-2024

காலை 09.45மணிசங்கல்பம் – ஹோம பூசை ஆரம்பம்
10.30 மணிஸ்ரீ வைத்தியநாத சுவாமிக்கு விசேட அபிஷேகம்
12.00 மணிமதிய பூசை
12.30 மணிவிபூதி பிரசாதம் அன்னதானம்

 ஒட்டாவா மாநகரில் எழுந்தருளி வேண்டும் வரம் தந்து அடியார்களுக்கு அருள் பாலிக்கும் ஸ்ரீ தையல்நாயகி சமேத வைத்தியநாத சுவாமியின் அனுக்கிரகத்தினால் நமது ஆலயத்தில் அடியார்களது சுபிக்‌ஷம் மேலோங்கவும் ஆலயத்தின் இறை சாந்நித்தியம் பெருகவும் சிவபெருமானுக்கு மிகவும் உகந்ததான ”ஸ்ரீ ருத்ர ஹோமம்”  நடைபெற திருவருள் கூடியுள்ளது.

இந்த மகத்துவம் பொருந்திய  ஹோமத்தில் பங்கேற்க விரும்பும் அடியார்கள் கோயில் பணிமனையுடன் தொடர்புகொண்டு $21 செலுத்தி தங்கள் பெயர் நட்சத்திரத்தைப் பதிவு செய்யும்படி வேண்டுகின்றோம்.

ஓம் நமசிவாய!

Sri Rudra HomamSunday
August 25, 2024

09.45 AMSangalpam – Homa Poosai begins
10.30 AMSpecial Abishekam to Sri Vaidyanatha Swami
12.00 Noon:Noon Pooja
12.30 PMVibuti Prasatham – Annathanam

 By the grace of Lord Sri Taiyalnayaki Sametha Vaithiyanatha Swami, who is blessing devotees from Vaitheeswarm at North Gower, “Rudra Homam” is to be conducted monthly during auspicious time for the benefit of devotees and to increase the “Irai Saanniththiyam” of the Temple.

Temple Administration kindly requests interested devotees to contact Temple Office to pay $21, register their names and natchathirams and to participate in this great ‘Sri Rudra Homam’ to Lord Siva and get benefitted.

ருத்ர ஹோமம்

படைத்தல், காத்தல், அழித்தல் எனும் முத்தொழில்களைப் புரியும் மும்மூர்த்திகளுள் ஒருவர், சிவபெருமான். சிவபெருமானின் அம்சமே ருத்ர மூர்த்தி வடிவம் ஆகும். ரிக் வேதம், ருத்ரனை, “வல்லவருக்குள் வல்லவர்” எனப் போற்றுகிறது. இந்த சக்தி வாய்ந்த ருத்ரனுக்கு அர்ப்பணிக்கப்படும் ஹோமமே, ருத்ர ஹோமம் ஆகும்.

ருத்ரனை ஆராதிக்கும் வகையில் செய்யப்படும் இந்த ஹோமம், பயம் மற்றும் கவலையைப் போக்கி, பாதுகாப்பை அளிக்க வல்லது. ருத்ரனின் அருளால், இக பர இன்பங்களை அள்ளித் தரக் கூடியது. மேலும், நவக்கிரகங்கள் எனப்படும் சக்தி வாய்ந்த ஒன்பது கோள்களை சாந்தப்படுத்தி, அதன் மூலம் தோஷங்களை நிவர்த்தி செய்து, நன்மை தரும் பலன்களை அதிகரிப்பதற்காகவும், இது மேற்கொள்ளப்படுகின்றது.