சோமவார விரதம்
அல்லது (கார்த்திகைத் திங்கள் விரதம்)
2024 –
18/11, 25/11, 2/12 & 9/12
மாலை | 5.00 மணி | உபயகாரர் சங்கல்பம் ஹோம பூசை |
மாலை | 7.30 மணி | கூட்டுப்பிரார்த்தனை |
இரவு | 8:00 மணி | விசேட மாலைப் பூசை ஆரம்பம் |
இரவு | 8.30 மணி | விபூதி பிரசாதம் வழங்குதல் |
நிகழ்ச்சி நிரல் : 06-12-2024 மட்டும் |
||
மாலை | 5.00 மணி | உபயகாரர் சங்கல்பம் ஹோம பூசை |
சிவன் விசேட 108 சங்காபிஷேக பூசை ஆரம்பம் | ||
மாலை | 7.30 மணி | கூட்டுப்பிரார்த்தனை |
இரவு | 8:00 மணி | விசேட மாலைப் பூசை ஆரம்பம் |
இரவு | 8.30 மணி | விபூதி பிரசாதம் வழங்குதல் |
Karthikai Month Somawara Fasting – 2024
November: 18, 25, December 02, & 09
திங்கட்கிழமை விரதம் இருப்பதனால் தம்பதியர் ஒற்றுமை அதிகரிக்கும். அதுவும் கார்த்திகை மாத திங்கட்கிழமை விரதம் அனுஷ்டிப்பதால் கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். காரணம் கார்த்திகை சோம வார விரதம் அனுஷ்டித்தால் அந்த சிவனுக்கே பிடித்தமானவராகி விடுவோம். இந்த விரதம் அனுஷ்டித்த சந்திரன் தனது நோய் நீங்கி சிவனின் தலையிலேயே இடம் பெறும் பேறு பெற்றுள்ளார். சோமவார விரதம் அனுஷ்டித்தால் நோய்கள் நீங்கும் உடல் ஆரோக்கியமடையும்.
சந்திரன் மனோகாரகன், திங்கட்கிழமை சந்திரனுக்கு உரியது. சந்திரனுக்கு உரிய இந்த விரதத்தை சந்திரன் ஆட்சி பெற்று கடகம் ராசியில் அமர்ந்துள்ள இந்த நாளில் தொடங்குவது சிறப்பானது. இந்த விரதம் ஏன் தோன்றியது?
இதை கடைபிடிப்பதால் என்ன நன்மை என்று யோசிப்பவர்களுக்கு புராண கதை ஒன்று உள்ளது.
நோய்கள் நீக்கும் விரதம் இந்த விரதத்தைக் கடைப்பிடிப்பவர்கள், அன்றைய தினம் முழுவதும் உபவாசம் இருப்பது நல்லது. அப்படி இருக்க முடியாதவர்கள் ஒரு பொழுது மட்டும் சாப்பிட்டு விரதத்தை கடைப்பிடிக்கலாம். இந்த விரதத்தை வாழ்நாள் முழுவதுமோ அல்லது 12 ஆண்டுகளோ கடைப்பிடிக்கலாம். அதுவும் இயலாதவர்கள் கார்த்திகை மாதத்தில் மட்டுமாவது இந்த விரதத்தை அனுஷ்டிப்பது நலம் தரும். இந்த விரதத்தை கடைப்பிடிப்பதால் முன் பிறவியில் செய்த பாவங்கள் நீங்கும் தீராத நோய்கள் தீரும் என்பது நம்பிக்கை.