விநாயகர் சஷ்டி விரதம்
2024
15 /12 ~ 04/01

மெய்யடியார்களே,

நிகழும் குரோதி வருடம்  கார்த்திகைத் திங்கள் 30ம் நாள் 15-12-2024 ஞாயிற்றுக்கிழமை ஒட்டவா சிவன் கோயிலில் வழமைபோல் இம்முறையும் விநாயகக்சஷ்டி விரதம் 21 நாடகளும் சிறப்புற நடைபெற இறையருள் கூடியுள்ளது.

நிகழ்ச்சி நிரல் – Religious Program

மாலை 6.00 மணிஉபயகாரர் சங்கல்பம்
  பிள்ளையாருக்கு பால் அபிஷேகம்
  அலங்காரம்
   
மாலை 6.30 மணி பிள்ளையார் கதை படித்தல்
மாலை7.45 மணி விசேட பூசை
இரவு 8.00 மணி விபூதிபிரசாதம் வழங்கல் 
   

Dear Devotees,

 Vinayakar Shasti viratham  will be celebrated in Ottawa Sivan Temple between December 15, 2024 to January 04, 2025   The program for the religious activities in temple is as follows:

6.00   PM   Sangalpam
     Milk Abishekam
    Alankaram
6.30  PM    Pillayar Kathai Reading
7.45  PM  Special Pooja begins
8.30     Distribution of Pirasatham
விநாயக சட்டி விரதம் இந்து மக்களினால் கடைப்பிடிக்கப்படும் விநாயக விரதங்களுள் ஒன்று. இது கார்த்திகை மாத தேய்பிறைப் பிரதமை முதல் மார்கழி மாத வளர்பிறைச் சட்டித் திதி வரையுள்ள இருபத்தொரு நாட்கள் அனுட்டிக்கப்படும் விரதமாகும். இதை பெருங்கதை விரதம், பிள்ளையார் கதை விரதம் எனவும் அழைப்பர்.
இந்த இருபத்தொரு நாட்களிலும் விநாயகருக்குத் திருமஞ்சன முதலியவைகளைச் சிறந்த முறையில் செய்வித்து ஒவ்வொரு நாளைக்கு ஒவ்வொரு விதமாக இருபத்தொரு வகையான பணியாரங்களை நிவேதித்தல் வேண்டும். முதல் இருபது நாட்களிலும் ஒருபோது உண்டு, பிள்ளையார் கதையைப் பெரியோர்கள் சொல்லக் கேட்டுக்கொண்டு எப்போதும் தியானத்தில் இருப்பவர்களாக நாட்களைக் கழித்தல் வேண்டும். இறுதிநாள் மட்டும் உணவை விடுத்து மறுநாட்களையில் பாரணை செய்து விரதத்தை முடித்துக் கொள்ளுதல் மரவு. ஈழத்தில் உள்ள விநாயகர் ஆலயங்களில் இவ்விரத காலங்களில் வரதபண்டிதரின் பிள்ளையார் கதை, விநாயக புராணம் என்பவற்றைப் படனம் செய்யும் வழக்கம் நெடுங்காலமாகப் பேணப்பட்டு வருகின்றது.