“Hunger is hunger; it knows no religion. All of God’s creatures, from the ant to the elephant, are slaves to hunger. 

“It is said that God can be glimpsed in the smile of a poor person. We feel gratified to be able to satisfy the hunger of so many people. It’s the best feeling in the world.”

Annathaanam: “Thaanam” in Tamil means “giving free”. Annathaanam is considered to be the best “Thaanam” among all types of free offerings. It is feeding the hunger devotees.

Among all the forms of charity, Annadhanam is considered as an act of highest virtue. All the other human needs like clothes, shelter, and education impact only the quality of life but the food impacts the life itself.

Hunger is an impatient visitor who arrives unsolicited, at regular intervals of time and demands immediate satisfaction. Hunger and life cannot co-exist. Hunger gnaws at the vitals, immobilizes and finally terminates the life. Not for nothing, hunger is termed a worst type of disease. Only food can remedy this dreaded disease.

Annadhanam is a way of viewing the life as precious and aiding its survival. Sharing food is sharing life. That is the reason Annadhanam is even called jeevandhan.

Kindly contact the Temple office to book your ‘Annathaanam’ or to add your name/s if you like to volunteer cooking and serving ‘Annathanam’.

OM Namachivaya

 

இந்த உலகத்தில் வாழும் ஒவ்வொரு உயிர்களுக்கும் தன்னுடைய வாழ்க்கையை அமைதியான முறையில் வாழ்வதற்கு அடிப்படை வசதிகள் தேவைப்படுகிறது.
உடை, இருப்பிடம் இவை இரண்டும் உங்கள் வாழ்க்கையின் தரத்தை மட்டுமே சொல்கிறது.
ஆனால் உணவு என்பது எல்லா ஜீவராசிகளும் வாழ்வதற்கு முக்கியமான அடிப்படை தேவையாகும். எனவேதான் அன்னதானம் என்பது இந்து மதத்தில் பின்பற்றப்படுகிறது.

இதில் அன்னம் என்பது உணவு
மற்றும் தானம் என்பது மற்றவருக்கு கொடுத்தல் என்று பொருள். உணவைமற்றவர்களுக்கு கொடுத்து உதவுவதே உன்னதமான தானமாகும் எனவே தான் தானத்திலே சிறந்த தானம்
அன்ன தானம் என்பார்கள்.

அன்ன தானம் செய்வது. மிக கடும் தோஷங்களையும் குறைக்கும் மகத்தான சக்தி அன்னதானத்திற்கு உண்டு.

அன்னதானம் செய்யுமிடத்தில் அருளும், அன்பும் தழைத்தோங்கும், தர்மதேவதை அவ்விடத்தில் நித்தியவாசம் செய்யும். கல்வி, செல்வம், ஞானம், மகிழ்ச்சி என அனைத்து நன்மைகளும் கிடைக்கும். என்றும் நம்மைப் பாதுகாத்து துணை நிற்கும்.

பசி நீங்கினால் உள்ளம் குளிரும். சித்தம் தெளியும். அகமும் முகமும் மலரும். உள்ளும் புறமும் களை உண்டாகும். கடவுள் நம்பிக்கை துளிர் விடும். தத்துவம் தழைக்கத் துவங்கும்.

பசித்த உயிர்களுக்கு உணவளித்தும், உயிர்க்கருணை செய்தும் ஜீவகாருண்ய நெறியைப் பின்பற்றினால், தனிப்பெருங்கருணையோடு விளங்கும் அருட்பெருஞ்ஜோதியாகிய ஆண்டவரின் அருளுக்குப் பாத்திரமாகலாம்.

அன்னதானம் செய்ய நினைப்பவர்கள் ஏதாவது நல்ல கோவில்களின் அன்னதான திட்டத்திற்கு உதவி செய்தால் கூட போதுமானது. அல்லது அனாதை / முதியோர் காப்பகங்களுக்கு நன்கொடை அளிக்கலாம். அல்லது பசுவிற்கு வாழைப்பழம் அல்லது அகத்தி கீரை வாங்கி கொடுக்கலாம். இப்படி வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அன்னதானம் செய்து வர, அவரவர் ஜாதகத்தில் உள்ள தோஷங்கள் படிப்படியாக குறைந்து, புண்ணிய பலன்கள் அதிகரிக்கும்.

 

ஓம் நமசிவாய!