மகா சிவராத்திரி.

செவ்வாய்கிழமை  2018 -2-13  Tuesday

மாசி மகம் அமாவாசைக்கு முன்னால் (சதுர்த்தசி) சிவராத்திரி என்று அழைக்கப்படுகிறது.

ஏன் இதனை சிவராத்திரி என்று அழைக்கின்றோம்.

அடியும், முடியும் காண முடியாத ஒரு சிவஜோதியாய் அதன் மலையாய் தோன்றி பேரொளி பிழம்பாய் நின்று பிரம்மன் மற்றும் திருமால் ஆகிய இருவரின் கர்வம் போக்கி நின்ற நேரமே, காலமே, வேளையே சிவராத்திரி. அக்காலம் மாசி மாதம் அமாவாசைக்கு முன்னால் (சதுர்த்தசி) திங்கட்கிழமை திருவோணம் நட்சத்திரம் கூடிய புண்ணிய காலம்.
அப்படி பேரொளி பிழம்பாய் சிவனார் எழுந்தருளிய காலம் இரவு 11.30 மணிக்கு மேல் 1 மணி வரையிலான காலம் ஆகும். இது பிரம்மன், சிவனுக்கு மட்டுமின்றி மனித ஜீவராசிகளுக்கும் ஆணவம் நீங்கி, பாவம் நீங்கி பரம்பொருளை தரிசிக்கும் அன்றிரவு முழுவதும் கண் விழித்து மனம், மொழி, மெய் (உடம்பு) இம்மூன்றும் சிவராத்திரியன்று சிவத்திடம் (ஆலயத்தில்) இருக்கும் வேளை, திரு ஐந்து எழுத்தினை (சிவாய நம, நமசிவாய) ஜெபித்து அன்று இரவை கழித்தல் நலம்.
இந்த ஒரு நாள் வழிபாடு ஆயிரம் நாள் சிவபூஜை செய்த பலனை அளிக்கும் என்பது சான்றோர் வாக்கு. நான்கு ஜாமத்துக்கும் உமை அம்மையார் சிவனை பூஜித்து மகிழ்ந்த இரவே சிவராத்திரி. அன்னை தம் மக்களின் நலன் வேண்டி இன்று (சிவராத்திரி) தங்களை பூஜிப்பவர்கள் அவரவர் செய்த பாவம் நீங்கி ஏழு தலைமுறையில் உள்ள பிதூர்களின் பாவம் நீங்கி குடும்பத்தில் அமைதியும், சாந்தியும் கிடைக்க வேண்டும் என்ற சிவன் அப்படியே ஆகட்டும் என்று அருளினார்.
மகா பாதகம் செய்த பாவியும், கொடியவனும் சிவராத்திரியன்று வழிபட்டு முக்தி பெறலாம். சிவராத்திரியன்று அதிகாலையில் எழுந்து நீராடி, நீறு அணிந்து, சிவபூஜை செய்து ஐந்து ஏழுத்து ஓதுதல் வேண்டும். பகல் முழுவதும் உணவருந்தாமல் இருக்கலாம். இயலாதவர்கள் பால், பழம் அருந்தலாம். மாலையில் மீண்டும் நீராடி சிவாலயம் சென்று நெய் விளக்கேற்றி வாசனை மலர்களாலும், வில்வத்தாலும் அர்ச்சிக்கலாம். இது மேலான புண்ணியத்தை தர வல்லது.
இரவில் நான்கு சமயங்களிலும் சிவ பூஜை செய்யலாம். இயலாதவர்கள் சிவ பூஜையில் கலந்து கொண்டு தம்மால் இயன்ற பொருட்களை சிவாலயத்திற்கு அளித்து, சிவபெருமான் அபிஷேகத்தில் கலந்து கொள்ளலாம்.
மகா சிவராத்திரியானது நான்கு காலங்களாக பிரிக்கப்படுகிறது.
1 முதல் ஜாமம் மாலை ( 5.30 மணி முதல் 8 மணி வரை).
அடியார்கள் வசந்த மண்டபத்தில் உள்ள சிவலிங்கத்துக்கு
பால் அபிஷேகம் செய்தல்.
இரண்டாவது ஜாமத்தில் (இரவு 8.30 மணி முதல் 10 மணி வரை)
மூன்றாம் ஜாமத்தில் (இரவு 10.30 மணியிலிருந்து நடுஇரவு 12.00 மணி வரை)
நான்காம் ஜாமத்தில் அதிகாலை (2.30 மணி முதல் காலை 4 மணி வரை)
அதிகாலை 5.00  சிவனுக்கு விசேட பால் அபிஷேகம்.
அதிகாலை 5.30   அதிகாலைப் பூசை :
விபூதிப் பிரசாதம் :அடியார்க்கு பாறணைப் பிரசாதம் வழங்கல்.