குரு பெயர்ச்சி 2021

குரு பகவான் பிலவ வருடம் ஐப்பசி 27 (நவம்பர் 13) அன்று மாலை 6.22 மணிக்கு மகர ராசியில் இருக்கும் அவிட்டம் 2ம் பாதத்திலிருந்து கும்ப ராசியில் இருக்கும் அவிட்டம் நட்சத்திரம் 3ம் பாதத்திற்கு குரு பெயர்ச்சி ஆக உள்ளார்.

திருக்கணித பஞ்சாங்கத்தின் படி நவம்பர் 20ம் தேதி (கார்த்திகை 4) குரு பெயர்ச்சி நிகழ உள்ளது.

குரு பகவான் 2021 நவம்பர் 13ம் தேதி (ஐப்பசி 27) முதல் ஏப்ரல் 14 (பங்குனி 30) வரை குரு கும்ப ராசியில் சஞ்சாரம் செய்வார். அதன் பின் அதிசாரமாக மீன ராசிக்கு சென்று திரும்புவார்.

குரு எப்படி பலன் கொடுப்பார்?
குரு தனது 2,5,7,9,11 ஆகிய பார்வை பலத்தால் மிக நல்ல பலனை அளிக்கக்கூடியவர். அந்த வகையில் 2021ம் ஆண்டு குரு பெயர்ச்சியின் காரணமாக மேஷம், மிதுனம், சிம்மம், துலாம், தனுசு, கும்பம் ஆகிய ராசிகளுக்கு மிக சிறப்பான அதிர்ஷ்ட பலன்கள் கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை.

எளிய பரிகாரங்கள்

  • சிவ வழிபாடு செய்யவும்.

  • ருத்ராபிஷேகம் செய்யலாம்.

  • முடிந்தால் 5 முக ருத்ராட்சம் அணியலாம்.

  • வியாழக்கிழமைகளில் எளிய உணவு வகைகளை உட்கொள்ளலாம்.

  • வியாழக்கிழமைகளில் அசைவ உணவை தவிர்ப்பது நல்லது.

ஓம் நமசிவாய